Gayathri Raghuram: ‘நான் மொட்டை பாப்பாத்தியா?.. திடீர் மொட்டை ஏன்? - விளாசல் பதில் கொடுத்த காயத்ரி ரகுராம்!
தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் போக்கு நீடித்தது. இந்த நிலையில் திடீரென்று அண்ணாமலை இவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இதனிடையே அரசியலில் குதித்த அவர் பாஜக கட்சியில் இணைந்து அந்தக்கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார்.
தொடர்ந்து, தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் போக்கு நீடித்தது. இந்த நிலையில் திடீரென்று அண்ணாமலை இவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார். இதனால் கொதித்துப் போன காயத்ரி, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, அண்ணாமலையை விமர்சித்தும் வருகிறார்.
இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மொட்டை அடித்துக்கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் தற்போது கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய பாட்டிக்கு நீளமாக முடி வளர்ப்பது மிகவும் பிடிக்கும். அதே போல எனக்கும் நீளமாக முடி வைத்துக்கொள்வது பிடிக்கும். அப்படித்தான் வைத்திருந்தேன். ஆனால், அதனை பராமரிப்பது என்பது மிக மிக கடினமான காரியம். இதனிடையே நான் வேண்டுதல் வைத்திருந்தேன். அதன் காரணமாகத்தான் மொட்டை அடித்தேன். அதாவது, 40 வயதில் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்றினேன்.
இன்னொரு காரணமும் இருக்கிறது. இன்று மக்கள் அழகு சாதன பொருட்களில் அதிகமாக பணத்தை செலவழிக்கிறார்கள். இன்றைக்கு ஜி.எஸ்.டி வேறு லெவலில் இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்களும் அழகு சாதன பொருட்கள்தான் நம்மை இளமையாக காட்டும் என்று நினைக்கிறார்கள். இதுவும் அழகுதான்.
இதன் மூலம் அழகு சாதன பொருட்களுக்கு செலவிடும் பெருந்தொகை மிச்சப்படுத்தப்படும் என்று சொல்லலாம் என்பதற்காகத்தான், இப்படியான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டேன்.
நான் மொட்டை போட்டு போட்டோ பதிவிட்ட உடன் என்னையும் கிழவி, மொட்டை, பாட்டி, மொட்டை பாப்பாத்தி என கமெண்டுகள் வசைப்பாடின. ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வில்லை. இந்த விஷயத்தில், இந்த தோற்றத்தில் நான் தன்னம்பிக்கையாக உணர்கிறேனா என்பதுதான் முக்கியம்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்