Gautham Vasudev Menon: ‘அவர் பேசினது ரொம்ப தப்பு..’ துருவ நட்சத்திரம் எப்போது?.. விஜயின் கடைசி படத்தில்..’ -கெளதம் மேனன்
எப்போது சிம்புவும், தயாரிப்பாளரும் ஒன்றாக இணைகிறீர்களோ அப்போது அந்த படம் வரும்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகிறது. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா, யோகிபாபு, டிடி, மன்சூர் அலிகான், விசித்ரா என்று பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை கெளதம் மேனன் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது, “துருவ நட்சத்திரம் சீக்கிரமே வரும்.” என்றார்.
மேலும் த்ரிஷா பற்றி அதிமுக பிரமுகர் தவறாக பேசியது குறித்து பேசிய கெளதம் மேனன், “ யார் பேசினாலும் தவறுதான். பெண்களை பற்றி தவறாக பேசினாலே தவறுதான்.” என்றார்
முழுக்க முழுக்க ஒரு காதல் கதை எப்போது வரும் என்று கேட்கிறீர்கள்.., “அதற்கு நாம் முதலில் அந்த மூடில் இருக்க வேண்டும். அது காற்று வரும் போது நிச்சயம் செய்து விடலாம்.
விஜய் சாரின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செய்வேன். ” என்றார்.
வெந்து தணிந்தது காடு படத்தின் பாகம் 2 எப்போது வரும் என்று கேட்கிறீர்கள். “எப்போது சிம்புவும், தயாரிப்பாளரும் ஒன்றாக இணைகிறீர்களோ அப்போதுதான் அந்த படம் நிச்சயம் வரும்” என்று பேசினார்.
நிகழ்வில் கெளதம் மேனன் பேசியதாவது, “நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே செய்வதற்கு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு நன்றி. வருணை ராஜா வீட்டுக்கன்று குட்டி என்று சொன்னார்கள். அந்த இடம் அவ்வளவு எளிதானது இல்லை.
எனக்கு வருணை முதன்முறையாக பார்க்கும் போது எனக்கு அப்படிதான் இருந்தது. நான் எதிர்மறையாக யோசிக்கும் நபர் கிடையாது. ஆகையால் எனக்கு அந்த எண்ணம் அப்படியே சென்று விட்டது. அவரிடம் பேசிய போது அவர் கடினமாக உழைக்கும் குழந்தை என்பது தெரிந்தது. வருண் குழந்தைப் போலதான். 10,15 படங்களில் நடித்துள்ளதால் சொல்கிறேன்.
கேமரா முன்னால் நின்று, 100 பேர் முன்னால் நடிப்பது எளிதான விஷயம் கிடையாது. அதை எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுத்தார் வருண்.
ஏதோ நான் பெரிய நடிகன் என்று நினைத்து நான் இதை சொல்லவில்லை. ஆனால் அதில் கிடைத்த அனுபவத்தில் இதை சொல்கிறேன். படத்தில் பாதி இடத்தில் செருப்பு, ஷூ இல்லாமல் நடித்தார். ஹீரோ கிருஷ்ணாவும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிடி, கதிர், கார்த்திக் என நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக செய்துள்ளனர். உங்களோடு நானும் படம் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என்றார்.
டாபிக்ஸ்