Gautham Menon: ‘பாரதிராஜா என்னை அடித்தார்’ போட்டு உடைத்த கவுதம் மேனன்!
‘வெட்டு குத்து பத்தி பேனாங்க. இந்த படத்திலும் வெட்டு, குத்து இருக்கு’
சென்னையில் நடந்த கருமேகங்கள் கலைகின்றன படத்தின் விழாவில் பேசிய இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் பேசியதாவது:
‘‘லெஜண்ட்ரி பாரதிராஜா சார், லெனின் சாருடன் பணியாற்றியது என் பாக்யம். பாரதிராஜா சாருடன் நடிக்கலாம் என்பதற்காக தான், இதில் நடிக்க நான் ஒப்புக் கொண்டேன். என்னை ஒரு நடிகரா, நான் இன்னும் பார்க்கவில்லை.
நிறைய படங்களில் நடிப்பேனா என்ற தெரியவில்லை. என்னிடம் வந்து தங்கர்பச்சான் சார் கேட்டதும், என்னால் மறுக்க முடியவில்லை. கதையை கேட்டு என்னால் மறுக்க முடியவில்லை. ரொம்ப எமோஷனா இருந்தது. அவருடைய படங்கள் எப்போதும் அப்படி தான் இருக்கும்.
பாரதிராஜா சார் மகனாக நடிக்க வேண்டும் என்று அவர் கூறியதும் எனக்கு பயமாகிவிட்டது. அவர் பயங்கரமா நடிப்பார். திருச்சிற்றம்பலம் பார்த்தேன். ரொம்ப பிடிச்சிருந்தது. கஷ்டமா இருக்கும், ஆனால் கற்க வேண்டிய விசயமா இருக்கும் என்று தான் இறங்கினேன்.
வெட்டு குத்து பத்தி பேனாங்க. இந்த படத்திலும் வெட்டு, குத்து இருக்கு. லெனின் சாரோட வெட்டு இருக்கு, பாரதிராஜா சார் என்னை அடிச்சாரு, அதனால் குத்தும் இருக்கு. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தோம்.
என்னை அடிக்கும் சீன் ஒரே ஷாட்டில் எடுக்க வேண்டும். பாரதிராஜா சார் அதில் யோசித்துக் கொண்டே இருந்தார். ‘சார் அடிச்சிடுங்க.. அப்படியாவது உங்க உதவியாளரா அடி வாங்கியதா இருக்கட்டும்’ என்று கூறினேன். அப்புறம் தான் அடித்தார்.
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. என்னுடைய டப்பிங் பேசும் போது, படத்தை கொஞ்சம் கொஞ்சம் பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. அடுத்து என்ன கதை தங்கர்பச்சான் சார் சொன்னாலும், நான் கேட்பேன்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் கவுதம் வாசுதேவ்மேனன் பேசியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்