Manjima and Gautham Karthik: டும் டும் டும்…மஞ்சிமாவை மணந்த கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடிக்கு இன்று திருமணம் நடைபெற்றது.
ஒரு நடிகரும், நடிகையும் காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிது அல்ல. இந்த ஆண்டு ஆதி - நிக்கி கல்ராணி , விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகிய திரைப்பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர்.
அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்து உள்ளவர்கள் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக். இவர்களின் திருமணம் இன்று (நவ.28) சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் திரை பிரபலங்களை அழைத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் இல்லை என கூறினார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. பலரும் இந்த புது தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து பணியாற்றினர். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின்னர் ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு அது காதலாக மாறியதாக கூறினர்.
டாபிக்ஸ்