Gautham Karthik and Manjima Mohan: மஞ்சிமா - கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gautham Karthik And Manjima Mohan: மஞ்சிமா - கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது?

Gautham Karthik and Manjima Mohan: மஞ்சிமா - கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது?

Aarthi V HT Tamil
Nov 13, 2022 10:51 AM IST

மஞ்சிமா - கௌதம் கார்த்திக் இம்மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சிமா - கௌதம் கார்த்திக்
மஞ்சிமா - கௌதம் கார்த்திக்

பின்னர் கடந்த சில வாரங்கள் முன்பு இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர்.

இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனுக்கும் வருகின்ற 28 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. 

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள். 

திருமணதுக்கு பின்பு நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்களை அழைத்து உள்ளனர்.

மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘3 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை முழுவதும் இழந்திருந்தபோது காக்கும் தேவதையாக நீ வந்தாய்.

 என் எண்ணத்தை மாற்றி நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர வைத்தாய். பிரச்னைகளை ஏற்றுக் கொண்டு நான் நானாக இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்தவன் நீ.

 எனக்கு பிடித்த எல்லாவற்றிலும் நீ இருப்பாய்’ என கூறியிருந்தார்.மஞ்சிமா - கௌதம் கார்த்திக்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.