யோலோ! யோலோ! வெளியானது கங்குவா படத்தின் இரண்டாவது பாடல்! மில்லியன் வியூவர்சை எட்டுமா?
சூர்யா நடிப்பில் வரலாற்று படமாக உருவாகியுள்ள கங்குவா படத்தின் இரண்டாவது பாடல் இன்று (அக்டோபர் 21 ) வெளியானது. இந்த பாடலுக்கு மில்லியன் பார்வையாளர்கள் வரும் என எதிறப்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா ஒரு வரலாற்றுப் படமாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 14 அன்று உலகம் முழவதும் உள்ள 3500 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இப்படம் இருவேறு பழங்குடியினர் கூட்டத்திற்குள் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் படம்
நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளாக நடித்த ஒரு சில படங்கள் தீடீரென படப்பிடிப்புகள் ரத்தானது. மேலும் சூர்யாவாகவே சில படங்களில் இருந்து விலகினார். வெற்றிமாறனின் வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. படம் குறித்தான எந்த தகவலும் வெளிவர வில்லை. சூர்யாவிற்கு கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் மட்டுமே வெளியாகி இருந்தது. சிறிய இடைவெளிக்கு பின்னர் வெளியாகும் சூர்யா படம் என்பதால் அவரது ரசிகர்கள் குஷில் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கங்குவா படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். மேலும் நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார். இந்நிலையில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கங்குவா வெளியாக உள்ளது.