GP Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து-g p muthu who got down in the middle of the street and started a fight - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gp Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து

GP Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து

Aarthi Balaji HT Tamil
Sep 19, 2024 12:45 PM IST

GP Muthu: ஜி. பி. முத்து, மகேஷ் இந்த கோயிலுக்கு இனி நீ பூஜை வைக்க கூடாது என கூறி நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்டு உள்ளார்.

GP Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து
GP Muthu: காது கொடுத்து கேட்க முடியல.. நடுத்தெருவில் இறங்கி சண்டை போட்ட ஜி.பி.முத்து

இந்த அம்மன் கோயிலுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். தமிழ் மாதத்தில் முதல் நாள் இந்த கோயிலில் பூஜை நடைபெறும். அப்போது ஜி. பி. முத்துவும் சில மாதங்களில் பங்கேற்பார். அதே போல் இந்த கோயிலுக்கு பூஜை செய்து வரும் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்களும் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் அந்த கோயிலுக்கு மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் பூஜை வைப்பதற்காக வந்து உள்ளனர்.

தரக்குறைவாக வீதியில் இறங்கிய ஜி.பி. முத்து

அப்போது அங்கு வந்த ஜி. பி. முத்து, மகேஷ் இந்த கோயிலுக்கு இனி நீ பூஜை வைக்க கூடாது என்று கூறியுள்ளார். அப்போது பூசாரி மகேஷ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கும் ஜி. பி. முத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வைரலாகும் வீடியோ

அப்போது வீதிக்கு வந்த ஜி. பி. முத்து மிகவும் தரக்குறைவாக வீதியில் நின்று பேசுகிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

டிக் டாக் கொடுத்த புகழ்

டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடிகர் ஜி. பி. முத்து. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்ட்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மூலம் தன் திறமையை வெளிப்படுத்திய ஜி. பி. முத்துவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பங்கேற்ற போட்டியாளர்களில் ஜி. பி. முத்துவுக்கு ரசிகர் கூட்டம் கூடியது. ஆனாலும், தன் மகனின் உடல்நலம் கருதி, போட்டியின் பாதியிலேயே வெளியேறினார் ஜி. பி. முத்து.

ஜி. பி. முத்து பயணம்

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர், வழக்கமான தனது யூடியூப் பணிகளை கவனித்து வந்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு கலக்கினார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு பட வாய்ப்புகளும் வந்தது. அதில் கிடைத்த வருமானம் மூலமாக சொந்தமாக வீடு, கார் உள்ளிட்டவற்றை வாங்கினார். ஜி. பி. முத்து தற்போது சன் தொலைக்காட்சியில் நடக்கும், டாப்பு குக்கு, டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.