MTV Splitsvilla X5 Winner: காசா? காதலா? என்கிற டுவிஸ்ட்..! டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா?-from drama to dream come true akriti and jashwanth rule mtv splitsvilla x5 and wins this season title - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mtv Splitsvilla X5 Winner: காசா? காதலா? என்கிற டுவிஸ்ட்..! டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா?

MTV Splitsvilla X5 Winner: காசா? காதலா? என்கிற டுவிஸ்ட்..! டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 14, 2024 05:52 PM IST

காசா? காதலா? என்கிற டுவிஸ்ட், இதயங்களை வென்ற ஜோடி என எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா 15: எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ் இந்த சீசனில் டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் என்பதையும், பைனலே சென்ற விதம் பற்றியும் பார்க்கலாம்

எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா 15: எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ் இந்த சீசனில் டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா
எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா 15: எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ் இந்த சீசனில் டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா

இந்தியாவின் மிகவும் பிரபலமான டேட்டிங் ரியாலிட்டி ஷோவான எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா 15: எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனாலே வெற்றிகரமாக முடிவடைந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளதது.

நியூமீ மற்றும் பிக்ஸ்டெர்மா ஷேடோ சன் புரொடக்சன் மற்றும் வைல்டு ஸ்டோன் டியோஸ் மற்றும் வாசனை திரவியங்கள் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் 15வது சீசனை வெற்றியாளர்களாக ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஜோடி வென்று டைட்டிலை தட்டிச் சென்றது.

இதயங்களை வென்ற ஜோடி

உண்மையான காதல் அனைத்து தடைகளையும் கடந்து, நிகழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தும் என்பதை, இந்த சீசனில் அவர்களின் பயணம் காட்டியது.

இறுதி எபிசோட் உணர்ச்சிகளின் ரோலர்கோஸ்டராக இருந்தது. இது மூன்று தனித்துவமான ஜோடிகளை கொண்டிருந்தது: லவ் மேட்ச் ருஷாலி - ஹர்ஷ், ஐடியல் மேட்ச் அக்ரிதி - ஜஷ்வந்த் மற்றும் பவர் மேட்ச் காஷிஷ் -திக்விஜய் என இருந்தார்கள்.

பல சவால்கள் இருந்தபோதிலும், ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி உறுதியுடன் இருந்தனர், அவர்களின் அசைக்க முடியாத பிணைப்பால் இதயங்களை வென்றனர். இந்த வெற்றி அந்த ஜோடியின் காதலுக்கும் உறுதிக்கும் சான்றாக அமைந்தது. வெறும் 5 நொடிகளில் வெற்றியை ஹர்ஷ் - ருஷாலி ஜோடி தவற விட்டது. அவர்களும், கடுமையாக போராடியது ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்தது.

மறக்க முடியாத சீசன்

இந்த சீசன் முதல் முறையாக காதல் மற்றும் துரோகம் தீம்களுடன் கூடுதல் உற்சாகத்தை சேர்த்தது. முன்னாள் போட்டியாளர்களை பிரதான வில்லாவில் கொண்டு வந்து நாடகத்தை கிளப்புவதில் குறும்பு மேக்கர் உர்ஃபி ஜாவித் முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் ஜோடிகளுக்கு இடையிலான தீவிர அமர்வுகள் மற்றும் ஜாரா ஜாரா ஸ்க்வீஸ் மீ போன்ற சவால்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.

இந்த சீசனில் ஏகப்பட்ட ஸ்பெஷல் கெஸ்ட் வந்தது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியை சேர்த்தது. ஊர்வசி ரவுடேலா, ஜஸ்டின் -சாக்‌ஷி, ஜன்னத் - ஃபைசு, கிராண்ட் பைனலேவுக்கு வந்த முனாவர் ஃபருக்கி போன்ற நட்சத்திரங்கள் வில்லாவை அலங்கரித்தனர்.

சுபி மற்றும் சிவெட்டின் ரிட்டர்ன் போன்ற வைல்டு கார்டு சம்பவங்களும் வில்லாவில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை கொண்டு வந்தது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்தது.

காசா? காதலா? என்கிற டுவிஸ்ட்

எபிசோடில் சிறப்பு விருந்தினராக கிராண்ட் பைனாலே டேட்டிங்கில் முனாவர் கலந்து கொண்டு இறுதிப் போட்டியாளர்களான பெண்களுக்கு தங்கள் ஜோடியுடன் ரூ. 10 லட்சம் எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து விலகி விடலாம் என்றும், வெற்றியாளருக்கு வெறும் 5 லட்சம் தான் கிடைக்கும் என்று பணத்தாசையை தூண்டும் வாய்ப்பை வழங்கினார்.

மேலும், அதில், ட்விஸ்ட் வைக்கும் விதமாக உங்கள் ஜோடியை கழட்டி விட்டு அந்த ரூ.10 லட்சத்தையும் நீங்களே எடுத்துச் செல்லலாம் என்றது காஷிஷ் மனதை முழுவதும் மாற்றியது.

காசா? காதலா? என வந்த நிலையில், மற்ற போட்டியாளர்கள் காதலை தேர்வு செய்து கிராண்ட் பைனல் விளையாட விரும்பினர். ஆனால், காஷிஷ் பணத்தை தேர்வு செய்து ரூ. 10 லட்சத்துடன் வெளியேறினார். இதனால் வெற்றி பெற்ற ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஜோடிக்கு ரூ. 5 லட்சம் மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது.

அக்ரிதியுடன் எனது வாழ்க்கை பயணம் தொடரும்

ஜஷ்வந்த் போபண்ணா வெற்றி பெற்றதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்: "இந்தியாவின் ஒரிஜினல் டேட்டிங் ரியாலிட்டி ஷோவை வெல்வது எனக்கு ஒரு பெருமையான தருணம்.

முந்தைய நிகழ்ச்சிகளில் நெருங்கி வந்த பிறகு, இந்த வெற்றி கடின உழைப்புக்கு பலன் அளித்துள்ளது. எம்டிவி ஸ்பிளிட்ஸ் வில்லா எக்ஸ்கியூஸ் மீ வெல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அக்ரிதியுடன் எனது வாழ்க்கை பயணம் முழுவதும் தொடரும். ரசிகர்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்தார்.

வெற்றி பெற்ற பிறகு அக்ரிதி நேகியால் கூறியதாவது, "என்னுடைய மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியாது! இந்த பயணம் உணர்ச்சிகளால் நிரம்பியது. ஜஷ்வந்துடன் வெற்றி பெற்றது சிறப்பு. ஏனென்றால் நாங்கள் வலுவான போட்டியாளர்களை எதிர்கொண்டோம். ஆனால் அனைத்தையும் ஒன்றாக இணைந்து செய்து வென்றோம்" என்றார்.

தனுஜ் விர்வானி முதன்முறையாக சன்னி லியோனுடன் இணைந்து தொகுத்து வழங்குவது குறித்த தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார்: "இந்த சீசன் முழுவதும் காட்டில் மேற்கொண்ட சவாரி போல் இருந்தது. போட்டியாளர்கள் அன்பைத் தேடினாலும் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உந்தப்பட்டனர். ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதிக்கு வாழ்த்துக்கள்; அவர்கள் உண்மையிலேயே தனித்து நின்றார்கள்" என்றார்.

இதேபோன்ற உணர்வுகளை சன்னி லியோன் எதிரொலித்தார்: "பல்வேறு சீசன்களில் பல போட்டியாளர்களைப் பார்த்ததால், அக்ரிதி மற்றும் ஜஷ்வந்த் இந்த முறை விதிவிலக்காக இருந்தனர். அவர்கள் நன்றாக விளையாடி, அதன் வழியில் அன்பைக் கண்டறிவதன் மூலம் இந்த வெற்றிக்கு தகுதியானவர்களாக மாறினார்கள்" என்றார்.

திகைக்க வைத்த திருப்பம்

கிராண்ட் ஃபைனாலே சவால் ஜோடிகளின் வலிமை, சுறுசுறுப்பு, இணக்கத்தன்மை மற்றும் இருக்கையின் விளிம்பில் உள்ள ட்யூனிங் ஆகியவற்றை சோதித்தது. காஷிஷின் பணத் தேர்வானது, திக்விஜய் போட்டியிலிருந்து எதிர்பாராதவிதமாக வெளியேற வழிவகுத்தது.

இந்த திருப்பம் அனைவரையும் திகைக்க வைத்தது, ஆனால் நிகழ்ச்சியின் கணிக்க முடியாத தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா சீசன் 15: எக்ஸ் க்யூஸ்மீ ப்ளீஸ் நிகழ்ச்சியில் நட்புகளில் தொடங்கி போட்டிகளாக மாறி, உணர்ச்சிகள் மற்றும் உத்திகளின் காக்டெய்லை உருவாக்கும் சிக்கலுக்குள்ளான முரண்பாடுகளின் காட்சியாக இருந்தது.

அடுத்த சீசன் என்ன என்ன ஆச்சர்யங்களைத் தரும் என்று ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எம்டிவி மற்றும் ஜியோ சினிமா ஸ்ட்ரீமிங் மூலம் தமிழிலும் இந்த சீசனில் ஏற்பட்ட மறக்க முடியாத காதல், மோதல், ட்விஸ்ட் தருணங்களைப் பாருங்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.