Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?-following dhanush samantha gvprakashkumar and others in kollywood jayam ravi is currently joining the list of divorce - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?

Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?

Kalyani Pandiyan S HT Tamil
Sep 09, 2024 05:37 PM IST

Jayam Ravi: ஜெயம் ரவி விவாகரத்து: - “பிரபலங்கள் தங்களைப் பற்றிய உண்மையான விஷயங்களை பேட்டியில் பகிர்வதில்லை. உண்மையில் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியான பக்கத்தை மட்டுமே நேர்காணல்களில் காண்பிக்கிறார்கள்.”

Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?
Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?
ஜெயம் ரவி
ஜெயம் ரவி

சமந்தா தொடங்கி தனுஷ், விஜய் யேசுதாஸ், ஜிவி பிரகாஷ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த பட்டியலில் ஏற்கனவே அடங்கி விட்டதால், இதனை மிஞ்சி மிஞ்சி போனால், ஒரு நாள் வேண்டுமென்றால் ஆச்சரிய செய்தியாக பார்ப்பார்கள். இரண்டாவது நாள் அது மெல்ல கரையும்.

 

மூன்றாவது, நான்காவது நாளில் இருந்த இடமே தெரியாமல் சென்று விடும். மீண்டும் அடுத்த ட்ரெண்டிங் டாப்பிக்கின் மீது மக்களின் கவனம் சென்று விடும். ஆனால், இவர்களை மீண்டும் திரையில் பார்க்கும் போது நமக்கு மீண்டும் மீண்டும் எழக்கூடிய ஒரே கேள்வி, அவ்வளவு புரிதலோடு பேட்டிகளில் பேசியவர்கள் எப்படி பிரிகிறார்கள் என்பதுதான்.

தனுஷ்
தனுஷ்

இது குறித்து மருத்துவர் ஒருவரிடம் பேசிய போது, “ பிரபலங்கள் தங்களது பர்சனல் சார்ந்த உண்மையான விஷயங்களை பேட்டிகளில் பகிர்வதில்லை. உண்மையில் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியான பக்கத்தை மட்டுமே நேர்காணல்களில் காண்பிக்கிறார்கள்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

அவர்களுக்கு இடையே என்ன விதமான பிரச்சினை இருக்கிறது, இருந்தது என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அந்த பிரச்சினை அவர்களின் பர்சனலுக்குள் அடங்கிவிடும். ஆகையால், அதனை நாம் பெரிய விஷயமாக பார்க்க தேவையில்லை. 

அவர்கள் பிரபலங்களாக இருப்பதாலேயேதான் இந்த விஷயம் இவ்வளவு பெரிய விஷயமாக நமக்குத் தெரிகிறது. நம்மூரில் இது போன்று நூற்றுக்கணக்கான விவாகரத்து தொடர்பான வழக்குகள் தினம் தினம் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இதுவும் ஒன்றும் அவ்வளவே” என்று பேசினார்.

மூன்றாவது நபரின் தலையீடு

ரிலேஷன்ஷிப் பாதியில் உடைவதற்கு தவறான புரிதல்கள், தேவையில்லாத வாக்கு வாதங்கள், சண்டைகள், முக்கியத்துவம் கொடுக்காமை, நேரம் ஒதுக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகள், காரணங்களாக அமைகின்றன. இதில் பெரும்பான்மையான பிரபலங்களின் ரிலேஷன்ஷிப் பாதியில் உடைவதற்கு ஏதோ ஒரு மூன்றாவது நபரின் தலையீடு இருப்பதை செய்திகளில் பார்க்க முடிகிறது.

சில ரிலேஷன்ஷிப்பில் அந்த மூன்றாவது நபர், சரியான வழிகாட்டியாகவும், சில ரிலேஷன்ஷிப்பில் தேவையே இல்லாத ஆணியாகவும் இருப்பார். அப்படி, ரிலேஷன்ஷிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும், அந்த மூன்றாவது நபர் எப்படி இருக்க வேண்டும்? அவரை தேர்ந்தெடுக்கும் முன்னர், நாம் பார்க்க வேண்டியவை என்ன? ரிலேஷன்ஷிப்பில் அவரின் எல்லை என்ன? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள, அப்பல்லோ மருத்துவமனையின் உளவியல் நிபுணர் டாக்டர் பார்கவ் ஸ்ரீ வேலுவை முன்னர் தொடர்பு கொண்டு பேசி இருந்தோம்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவி

அவர் பேசும் போது, “ ரிலேஷன்ஷிப்ல மூன்றாவதா ஒரு நபர் நுழையுறாரு அப்படின்னா, அவர் யார் அப்படிங்கிற கேள்வி, இங்க ரொம்ப முக்கியம். அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு ஃப்ரண்டாகவோ, வேறொரு உறவினராகவோ, உங்க ரிலேஷன்ஷிப்ல நடக்கக்கூடிய பிரச்சினைகள முழுமையா தெரியாதவராகவோ இருக்கக்கூடாது.

மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.

உங்க ரிலேஷன்ஷிப்புக்குள்ள வரக்கூடிய அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு தரப்புக்கு மட்டும், ஆதரவானவரா இருக்கக்கூடாது. அவர் நடுநிலையா இருந்து பிரச்சினைகள அணுகனும். அப்புறம், உங்க பிரச்சினைகள், குறித்த முழுமையான புரிதல் அவர்கிட்ட இருக்கணும்.

சமந்தா தன்னுடைய முன்னாள் கணவருடன்
சமந்தா தன்னுடைய முன்னாள் கணவருடன்

அந்த மூன்றாவது நபர் ஒரு மனநல மருத்துவராவோ அல்லது மேரேஜ் கவுன்சிலாராவோ என யாரா வேணாலும் இருக்கலாம். ஆனா ஒரே கண்டிஷன், அவர் நடுநிலையா பிரச்சினைய அணுகனும்.

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அந்த மூன்றாவது நபர் உங்க ரிலேஷன்ஷிப்ல வரும் பிரச்சினைக்கு, முடிவு கொடுக்கக்கூடியவரா இருக்கவே கூடாது. அதில் அவர் தன்னுடைய கருத்தை முன்வைத்து விட்டு, நீங்கள் யோசித்து நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லி செல்ல வேண்டும்.

இதுதான் ரிலேஷன்ஷிப்ல அந்த மூன்றாவது நபரோட ரோல்.. அந்த மூன்றாவது நபர் யாரா இருக்கலாம் அப்படிங்கிறத, நிச்சயமா இரண்டு பேரும் உட்கார்ந்து பேசிதான் முடிவெடுக்கணும். அது சொந்தக்காரராவோ அல்லது பொதுவான நண்பராவோ கூட இருக்கலாம். ரிலேஷன்ஷிப்ல இரண்டு பேரின் அனுமதி இருந்தா மட்டும்தான், அந்த மூன்றாவது நபர் லாஜிக் வொர்க் அவுட் ஆகும்.” என்று பேசினார்.

மருத்துவர் விபரம்:

Dr.Bhargav Sirivelu

Consultant psychiatrist

Veeras hospital and Apollo hospital

bharghavsirivelu@gmail.com

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.