Jason Vijay: ஐந்து இளம் ஹீரோக்கள்! வாரிசுகளின் ராஜ்ஜியமாக உருவாகும் விஜய் மகன் படம்? இருவர் லிஸ்ட்லயே இல்லையே
விஜய் மகன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் ஐந்து இளம் ஹீரோக்களை நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகமாக செய்ய இருப்பதாக லைக்கா நிறுவனம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாகவே இருந்தது.
விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாவார் என யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். வேட்டைக்காரன் படத்தின் ஓபனிங் பாடலான நான் அடிச்ச தாங்க மாட்ட பாடலில், விஜய்யுடன் இணைந்து சில விநாடிகள் தோன்ற டான்ஸ் ஆடி நன்கு பரிச்சயமானார் அவரது மகன் சஞ்சய். அப்போது சிறுவனமாக இருந்த சஞ்சய், இப்போது லண்டனில் ஸ்கீரின் ரைட்டிங்கில் BA (Hons) படிப்பும், டொராண்டோ திரைப்பட பள்ளியில் திரைப்பட தயாரிப்பு பிரிவில் டிப்ளமோவும் முடித்திருக்கிறார்.
அத்துடன் சத்தமில்லாமல் “Pull The Trigger” என்ற குறும்படத்தையும் அவர் இயக்கி இருக்கிறார்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அவரது படத்தில் நடிக்கப்போவது யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. வழக்கம்போல் இந்த படத்தில் அஜித், விஜய் சேதுபதி என டாப் நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் நடிக்கப்போவதாக கிளப்பினர்.
இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா முரளி ஆகியோரின் பெயர் அடிபட்டது. இவர்கள் மூவரும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன.
இதைத்தொடர்ந்து தற்போது புதிதாக இந்த லிஸ்டில் துருவ் விக்ரம் பெயரும் இடம்பிடித்துள்ளது. அத்துடன் மற்றொரு சர்ப்ரைஸ் விஷயமாக இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கும் இந்த படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன் படத்துக்கு இசையமைக்கலாம் என்று பேச்சும் அடிபடுகிறது. இதை பார்க்கையில் வாரிசுகளின் ராஜ்ஜியமாக இவரது படம் உருவாகும் என தெரிகிறது.
எது எப்படியாக இருந்தாலும், சஞ்சய் இயக்குநராவது குறித்து முறையாக அறிவிப்பு வந்தது போல், இந்த படத்தின் ஹீரோக்கள் குறித்தும் விரைவில் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்