HBD Sarkunam : 10 ஆம் வகுப்பில் 2 முறை தோல்வி.. இந்த படங்கள் தான் நான் சினிமாவுக்கு வர காரணம்.. சற்குணம் பகிர்ந்த சில!
இயக்குநர் சற்குணம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சற்குணம் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும், தான் உணர்ந்த விஷயங்களைப் படமாக்குவதை கொள்கையாக வைத்திருப்பவர் சற்குணம்.
விமல், ஓவியா நடித்த களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். வாகை சூட வா, நையாண்டி,சண்டி வீரன்,களவாணி 2 முதலான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.சற்குணம் சினிமாஸ் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சற்குணம் சினிமாஸின் முதல் படம் மஞ்சப்பை.
2009 ஆவது ஆண்டில் விமல், ஓவியா நடிப்பில் வெளியான, காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான களவாணி திரைப்படம் இவரது முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு கிராமங்களை எப்படி ஒரு காதல் ஒன்றிணைக்கிறது என்பதே 'களவாணி' படத்தின் கதை.
துபாயிலிருந்தபடி குடும்பத்துக்கு பணம் அனுப்பும் நடுத்தர வயது குடும்பத் தலைவர்கள், பெண்களிடம் வம்பு வளர்க்கும் இளந்தாரிகள், மோட்டார் ரூமுக்குள் ஒளிந்து கொண்டபடி வளர்க்கப்படும் காதல், ரெக்கார்ட் டான்ஸ் என கிராமத்து கலாச்சாரப் பதிவாகவும் அமைந்தது 'களவாணி'.
இப்படத்தில் விமல் அம்மாவாக நடித்த சரண்யா நடித்த இந்த டயலாக் என் பையன் 'ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா எம் மகன் டாப்பா வருவான்' என சொல்வது இன்றும் பலர் முனுமுனுக்கும் டயலாக்காக உள்ளது.
முதல் படத்தில் வெற்றியை ருசித்த சற்குணம் இரண்டாம் படத்தில் வெற்றியை ருசிப்பாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. மேலும் களவாணி படத்திற்கு பிறகு இவர் இயக்கும் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி 2011 ஆவது ஆண்டில் வெளியான வாகை சூட வா திரைப்படம் இவரது இரண்டாவது திரைப்படமாகும். இப்படத்தில், இப்படத்தில் களவாணி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விமல் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
இப்படம், ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு கிராம சேவா என்ற சமூக நல அமைப்பு மூலம் 6 மாத காலம் சான்றிதழுக்காக கிராமப்புற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர வரும் வேலுத்தம்பி என்ற கதாபாத்திரத்தில் விமல் நடித்துள்ளார்.
செங்கல் சூளையில் வேலை செய்யும் குழந்தைகளின் அவல நிலையையும், போதிய கல்வியறிவு இல்லாததால் கொத்தடிமைகளாக இருக்கும் மக்களின் வாழ்வையும் கருத்தில் கொள்ளும் விமல் ஒரு கட்டத்தில் அரசு வேலை கிடைத்தும் அதை உதறிவிட்டு ஊரிலேயே தங்கிவிடுவார்.இந்த கதையை மிகவும் அற்புதமாக எடுத்து இருப்பார் சற்குணம்.
இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமான நையாண்டி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் தனுஷ், நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
பின்னர் அதர்வா, ஆனந்தி நடிப்பில் பாலாவின் தயாரிப்பில் 2015ஆவது ஆண்டில் வெளியான சண்டி வீரன் திரைப்படம் இவர் இயக்கும் நான்காவது திரைப்படமாகும். இப்படம் தண்ணீரின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் எடுத்து இருப்பார். இதுவும் கிரமத்து கதைகளம் தான். இப்படம் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம்.
இவர் தான் சினிமாவுக்கு வந்தது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ”இதயம், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற படங்கள் தான் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. முக்கிய காரணம் என்றால் குடும்ப சூழ்நிலை தான்.
எங்க அப்பா வெளிநாட்டில் இருந்தார். நான் நன்றாக படிப்பேன் என நம்பினார். ஆனால் நான் 10 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதை திரும்பவும் எழுதினேன் ஆனால் அதிலும் தேர்ச்சியடையவில்லை. அதன்பிறகு ஐடிஐ சேர்ந்தேன். எனக்கே ஒருமாறி இருந்தது. இவ்வளவு நமக்கு சப்போர்ட் இருந்தும் ஐடிஐ தான் எடுக்க முடிந்தது. எனக்கு அந்த படிப்பில் அவ்வளவு ஆர்வமும் இல்லை.
நமக்கு என்ன தான் திறமை இருக்கு அப்படினு பார்க்கும் போது அதிகமா நான் சினிமா பார்பேன். ஒரு படம் பார்த்துட்டு அதை நண்பர்களிடம் சொல்லும் போது படம் பார்க்கிற மாறியே சொல்றனு நண்பர்கள் சொன்னார்கள். அப்போ தான் சினிமாக்கு போகலானு ஆசை வந்தது”என தெரிவித்தார்.
இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதுபோல இன்னும் பல வெற்றி படங்களை கொடுக்க வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்