Irfan vs Biriyani Man: எங்கு பார்த்தாலும் பிரியாணி மேன்.. தற்கொலை முயற்சி ஏன்.. இர்ஃபானுடன் என்ன பஞ்சாயத்து?
Irfan vs Biriyani Man: பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Irfan vs Biriyani Man: பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவர் சமீப காலமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார். இர்ஃபானுக்கு யூடியூப்பில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.
சுற்றி வரும் சர்ச்சைகள்
இர்ஃபானுக்கு எந்த அளவிற்கு புகழ் இருக்கிறதோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் இருக்கிறது. கடந்த ஆண்டு அவரின் கார் மறைமலை நகர் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயற்சி செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். பின்னர் இர்ஃபானின் காரை அவரது உறவினர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாக சொல்லப்பட்டது.
அதே போல் துபாய் சென்று தன் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டு அதை விழாவாக சென்னையில் நடத்தினார் என சர்ச்சை கிளம்பியது.
Irfan vs Biriyani Man
இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக யூ-டியூப்பில் ட்ரெண்டாக மாறி இருக்கும் சேனல் தான் பிரியாணி மேன். இதை நடத்தி வருபவர், அபிஷேக். இவருக்கு இர்ஃபானுக்கும் சமீப காலமாக பெரிய பஞ்சாயத்து நடந்து வருகிறது.
இர்ஃபான் தான் காரை ஒட்டி வந்து விபத்து ஏற்படுத்தினார், அவரை அரசியல் கட்சியினர் காப்பாற்றிவிட்டதாக கூறினார். அதே போல் இர்ஃபான் சென்று ரிவ்யு செய்யும் உணவகங்களில் தரமான உணவு வழங்கவில்லை, அவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என அடுக்கடுக்காக அவரை விமர்சனம் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தர் பிரியாணி மேன் அபிஷேக். இதை பார்த்து கடுப்பான இர்ஃபான் அவருக்கு பதிலடியும் கொடுத்தார்.
இர்ஃபானுடன் மட்டும் இல்லாமல் யூடியூப் பிரபலமான டெய்லர் அக்கா ஆபாசமான காட்சி செய்து வீடியோ வெளியீடுகிறார் என குற்றம் சாட்டினார். இதனால் அவரின் ரசிகர்கள், கடுமையாக பிரியாணி மேனை சாடியதாக சொல்லப்படுகிறது.
தற்கொலை முயற்சி
இந்நிலையில் இந்த பிரச்னை ஒரு புறம் சென்று கொண்டு இருக்க நேற்று, பிரியாணி மேன் தனது யூடியூப் சேனலின் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றார். ஜேசன் என்பவர்தான் காரணம் என்று கூறி விட்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்ற போது லைவ் பார்த்து நண்பர் பிரியாணி மேனின் தாய்க்கு போன் செய்தார்.
உடனே அவர் சென்று தன் மகனை காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்கொலை செய்து கொள்வதே தவறே, அதை அவர் லைவ் வீடியோவில் முயன்றது மிகப் பெரிய தவறு, அதனால் சட்டப்படி பிரியாணி மேன் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
தற்கொலை தீர்வல்ல
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்