HBD Pierce Brosnan: கமர்ஷியல் சினிமா போல் சுவாரஸ்யங்கள் நிறைந்த நிஜ வாழ்க்கை! ஸ்டைலிஷான ஜேம்ஸ் பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன்
பியர்ஸ் பிராஸ்ன் நிஜ வாழ்க்கையே ஒரு கமர்ஷியல் சினிமா போல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக உள்ளது. 90ஸ்களில் பாண்ட் கதாபாத்திரத்தில் தோன்றி, தனது ஸ்டைலிஷ் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார் பியர்ஸ் பிராஸ்னன்.
அயர்லாந்து நாட்டில் பிறந்து, உலக முழுவதும் கொண்டாடடப்படும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவராக இருப்பவர் ஹாலிவுட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன். 1995 முதல் 2002 காலகட்டத்துக்கு இடையே வெளியான நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பாண்டாக தோன்றி ரசிகர்களை தனது அற்புத நடிப்பால் கவர்ந்தவராக பிராஸ்னன் உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில், திமோதி டால்டன்க்கு அடுத்தபடியாக ஐந்தாவது பாண்டாக தோன்றியுள்ளார்.
பாண்ட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மற்ற படங்களிலும் நடித்து வந்துள்ளார். சில சட்ட சிக்கல்கள் காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்க முடியாமல் இருந்தது. அதன் பின்னர் பாண்ட் திரைப்படங்கள் மீண்டும் தயாரானபோது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். பாண்ட் கதாபாத்திரத்தில் அதிகம் பேரால் ரசிக்ககூடிய நடிகர்களுள் ஒருவராக இருந்த பிராஸ்னன், விமர்சக ரீதியாகவும் இந்த கேரக்டருக்கு பாராட்டுகளை பெற்றார்.
கமர்ஷியல் சினிமா போன்ற பிராஸ்னனின் வாழ்கை
பியர்ஸ் பிராஸ்னனின் தந்தை ஒரு தச்சு ஆசாரியாக இருந்துள்ளார். பிராஸ்னன் கைகுழந்தையாக இருந்தபோதே குடும்பத்தை கைவிட்டு சென்றுள்ளார். தாத்தா, பாட்டி அரைவணைப்பில் வளர்ந்த பிராஸ்னன், பள்ளிப்படிப்பை லண்டனில் தொடர்ந்துள்ளார்.
பிராஸ்னன் தயாரின் இரண்டாவது கணவர்தான், அவரை பாண்ட் படங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இதன் மூலம் பாண்ட் கதாபாத்திரம் அவருக்கு பரிச்சயம் ஆகியுள்ளது.
நம்ம ஊர் கூத்துப்பட்டறை போல் லண்டனில் இருக்கும் மேடை நாடக மையத்தில் தனது 16வது வயதில் முறையாக நடிப்பை பயின்றுள்ளார்.
டிவி சீரிஸ், சினிமாக்களில் அறிமுகம்
ஆரம்பத்தில் டிவி சீரிஸ்களில் நடித்து வந்த பியர்ஸ் பிராஸ்னன் பின்னர் சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். மிஸஸ் டவுட்பயர் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகராக மாறினார். இந்த படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி படத்தின் மூலக்கதையாக இருந்தது.
ஸ்பை த்ரில்லர். காமெடி, பேண்டஸி, பொலிட்டிகல் த்ரில்லர், ஹெய்ஸ்ட் என அனைத்து வகையான படங்களில் நடித்த பிராஸ்னன்,, பாண்ட் பட தயாரிப்பாளர்கள் சந்தித்து வாய்ப்பை பெற்றார். மூன்று பாண்ட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நான்கு பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.
பிராஸ்னனின் பாண்ட் படங்கள்
1995இல் வெளியான கோல்டன் ஐ படம் மூலம் பாண்டாக அறிமுகமானார் பிராஸ்னன். இந்த படம் அந்த காலகட்டத்தில் அதிக வசூலை ஈட்டிய பாண்ட் படமாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து 1997இல் டுமாரே நெவர் டைஸ், 1999இல் தி வேர்ல்ட் இஸ் நாட் எனாஃப் படங்களில் நடித்தார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படங்கள் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை. குறிப்பாக பிராஸ்னனின் ஸ்டைலிஷ் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.
பிராஸ்னன் நடித்த கடைசி பாண்ட் படம் டை அணதர் டே 2002இல் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.
பாண்ட் படங்களில் இருந்து வெளியேறி பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார் பியர்ஸ் பிராஸ்னன்.
பாண்ட் ஆக விடியோ கேம்களில்
பாண்ட் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் பாண்ட் விடியோ கேம்களிலும் தோன்றியுள்ளார். கோல்டன் ஐ 007, டுமாரே நெவர் டைஸ், தி வேர்ல்ட் இஸ் நாட் எனாஃப், 007 ரேசிங், ஜேம்ஸ் பாண்ட் 007: நைட்பயர், ஜேம்ஸ் பாண்ட் 007: எவரிதிங் ஆர் நத்திங் போன்ற விடியோ கேம்களிலும் வந்துள்ளார்.
90ஸ்களின் இறுதி காலகட்டத்தில் நடந்த பல்வேறு விஷயங்கள் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்ததாக இருந்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே. அந்த வகையில் 90ஸ் பாண்டாக தனது ஸ்டைலிஷ் நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் பியர்ஸ் பிராஸ்னன்.
கடந்த நூற்றாண்டின் கடைசி பாண்டாகவும், இந்த நூற்றாண்டின் முதல் பாண்டாகவும் இருந்தவர் என்ற பெருமை பெற்றிருக்கும் பியர்ஸ் பிராஸ்னன் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்