Farhana OTT: ஃபர்ஹானா ஓடிடியில் எப்போது ரிலீஸ்?
ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது என பார்க்கலாம்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம் தான் ஃபர்ஹானா. தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், கிட்டி, ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பட கதை
கால் சென்டரில் வேலை பார்க்கும் ஃபர்ஹானா அங்கு கால் செய்து வித்தியாசமாக பேசும் ஒருவரிடம் மனதை பறி கொடுக்கிறார். இதனிடையே அங்கு வேலை செய்யும் பெண் ஒருவர் இப்படி போன் பேசிய ஒருவருடன் சென்று உயிரை பறிகொடுக்கிறார்.
இதைப்பார்த்து பயந்து போகும் ஃபர்ஹானா அவர் மீது வைத்த பிரியத்தை அப்படியே கட் செய்து எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் கால் செய்தவர் விடுவதாக இல்லை. அதன் பின்னர் என்ன ஆனது? ஃபர்ஹானாவின் மறைமுகப்பிரியம் அவரை எங்கே கொண்டு சென்றது? இது அவரது கணவருக்கு தெரிந்ததா? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.
ஓடிடி ரிலீஸ்
இந்நிலையில் ஃபர்ஹானா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஃபர்ஹானா, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இவரது நடிப்பில் இன்னும் அரை டஜன் படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர் இந்தியில், அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து டாடி என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்