HBD Chef Damu : சமையல்காரனுக்கு யாரும் பொண்ணு தரமாட்டார்கள்.. ஆனால்.. செஃப் தாமு சொன்ன சில விஷயம்!
குக் வித் கோமாளி பிரபலம்,பிரபல சமையல் வல்லுநர் செஃப் தாமு பிறந்த நாளான இன்று அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரபல சமையல் வல்லுநர் செஃப் தாமு. கோதண்டராமன் தாமோதரன் என்பது இவரின் முழு பெயர். சமீபத்தில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் நிகழ்ச்சியில் இந்த விருதானது உலகத் தமிழ் அமைப்பால் அவருக்கு வழங்கப்பட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த நிகழ்ச்சியின் நடுவராக செஃப் தாமு பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் செஃப் தாமுவுக்கு மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்றே சொல்லலாம்.
அவரின் வெகுளியான பேச்சு, போட்டியாளர்களை அவர் கையாளும் விதம், அவரின் குழந்தைதனமான சேட்டை என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதாவது அவரை தாமு என அழைப்பதை விட அப்பா என அழைக்கப்படும் அளவுக்கு பிரபலம்.
இவர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் கேரியரை தொடங்கிய காலத்தில் செஃப் என்று சொல்லமாட்டர்கள். சமையல்காரர் என்றுதான் சொல்வார்கள். அது என்னைக் கொஞ்சம் காயப்படுத்தும். 1994ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி முடித்துவிட்டு போகும்போது சமையல்காரர் போகிறார் என்பார்கள். சமையல்காரர் என்று சொல்வது தவறில்லை. அதே நேரத்தில் அதைத் தாண்டி நாம் படித்திருக்கிறோம் என்பதால் நம்மை குறைத்து கூறுவதுபோல இருக்கும்.
கேட்டரிங் துறை பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அது தீண்டத்தகாத துறைபோலதான் இன்றும் இருக்கிறது. என் பையன் கேட்டரிங் படிக்கிறான் என்பதைச் சொல்ல பெற்றோர்களுக்கே தயக்கம் உள்ளது. இந்த நிலை விரைவில் மாறும் என்று நினைக்கிறேன்.
நான் கேட்டரிங் படிக்கப் போகிறேன் என்று சொன்னபோது என் அம்மாவிற்கு விருப்பமே இல்லை. காரணம், சமையல்காரனுக்கு யாரும் பொண்ணு தரமாட்டார்கள் என்றார். என்னுடைய திருமணம் தொடர்பான பேச்சு எழுந்தபோது அதுதான் நடந்தது. வீட்டில் பெரியவர்கள் பேசி என்னுடைய உறவுக்கார பொண்ணை திருமணம் செய்துவைத்தார்கள்”என்றார். இன்று செஃப் தாமு பிறந்தநாள். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்