தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ethirneechal Serial Promo On February 21

Ethirneechal Serial Promo : பெரியப்பாவை அவமானப்படுத்திய தாரா.. குணசேகரனுக்கு எதிராக திரண்ட குடும்பம்

Aarthi Balaji HT Tamil
Feb 21, 2024 11:43 AM IST

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல் சீரியல்
எதிர்நீச்சல் சீரியல்

ட்ரெண்டிங் செய்திகள்

அதிலும் பகல் சீரியல்களை விட இரவு சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். அப்படி மக்களின் மனதில் இடம் பிடித்த சீரியல் தான், எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை கிடைத்து வந்தது. இரவு 9 மணி வந்தால் உடனே பெண்கள் கண்டிப்பாக டிவி முன்பு அமர்ந்து இந்த சீரியல் பார்க்க அமர்ந்துவிடுகிறார்கள்.

அதற்கு காரணம், அந்த சீரியலில் இடம் பெற்ற குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து. ஆம், அவரது கரடுமுரடான வில்லனிசம் ஏராளமானோரை இந்த சீரியலுக்கு அழைத்து வந்தது.

ஆனால் கடந்த வருடம் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட, சீரியலுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சீரியல் கதை முழுவதுமாக மாறியது. அவர் பாத்திரத்தை நிரப்ப முடியாமல் போனது சீரியலின் டிஆர்பியில் கடும் அடியை சந்தித்து இருக்கிறது.

இதனிடையே தற்போது எதிர்நீச்சல் சீரியலில், அந்த வீட்டு பெண் தர்ஷினியை யாரோ கடத்தி சென்றுவிட்டார்கள். அது தான் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இப்போது எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போனதற்கு ஜீவானந்தம் தான் காரணம் என்று குணசேகரன் சொல்கிறார். ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் தான் காரணம் என புகார் கொடுக்கிறார். குணசேகரனுக்கு ஆதரவாக மாறி காவல் துறையினர், ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேனுகா ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.

நீதிபதியிடம் பெண்களுக்கு எதிரான குற்றாச்சாட்டு வைக்கப்படுகிறது. ஜீவானந்தம், ஈஸ்வரி எல்லோருக்கும் தீர்ப்பு எழுதுகிறார். ஆனால் அது என்னவென்று தெரியவில்லை. இன்னொரு பக்கம் தர்ஷினி நடுக்காட்டுக்குள் எங்கே போவது என தெரியாமல் ஓடிக் கொண்டு இடிருக்கிறார். இறுதியாக ஈஸ்வரி தவிர மற்ற பெண்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், தாரா தன் அம்மா கழுத்தில் இருக்கும் நகையை கழட்டி பெரியப்பா குணசேகரனிடம் கொடுக்கிறார். உடனே குணசேகரன் என்னை அவமானப்படுத்துகிறீர்களா? என கடுப்பாகிறார்.

மேலும் குணசேகரனை பகைத்துக் கொண்ட யாருமே வாழ முடியாது என திமிருடன் பேசுகிறார். ஆனால் அவரின் பேச்சை யாரும் கண்டு கொள்ளவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்