தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ethirneechal Serial Actress Madhumitha Explains That She Did Not Drive Drunk With Alcohol

Ethirneechal Actress: 'நான் மதுபோதையில் கார் ஓட்டினேனா?' - டிவி நடிகை மதுமிதா சொன்ன விளக்கம்!

Marimuthu M HT Tamil
Feb 29, 2024 01:44 PM IST

தான் மதுபோதையில் கார் ஓட்டவில்லை என எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா விளக்கமளித்துள்ளார்.

'நான் மதுபோதையில் கார் ஓட்டினேனா?' - டிவி நடிகை மதுமிதா சொன்ன விளக்கம்!
'நான் மதுபோதையில் கார் ஓட்டினேனா?' - டிவி நடிகை மதுமிதா சொன்ன விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமானவர், நடிகை மதுமிதா. இவர் எதிர்நீச்சல் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். நடிகை மதுமிதா, தனது காரில் சென்னை சோழிங்கநல்லூரில் பயணித்துக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின்மீது, அதில் பயணித்த நபருக்கு காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் தான், அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், ரவிக்குமார் என்றும்; அவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் என்பதும் தெரியவந்தது.

நடிகை மதுமிதாவின் இந்தச் செயலால் அதிருப்தியான பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், அதன்மூலம் காயத்தை ஏற்படுத்துதல் ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில் நடிகை மதுமிதா மது அருந்திவிட்டு காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தியாக நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர்.

இதற்கு விளக்கமளித்து காணொலிப் பதிவிட்ட எதிர்நீச்சல் நடிகை மதுமிதா, ‘’அனைத்து ஊடகங்களிலும் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. நான் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, ஒரு போலீஸ்காரரை அடித்திருக்கேன் என்றும், அதனால் அவர் தீவிரக்காயம் பெற்றுள்ளதாகவும் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அது உண்மை கிடையாது. நான் மது குடிக்கவில்லை. ஆம். அப்போது ஒரு சின்ன விபத்து நடந்தது உண்மை தான். இப்போது போலீஸ்காரர் நலம்பெற்றுவிட்டார். நானும் நன்றாகத்தான் இருக்கிறேன். அதனால், என்னைப் பற்றி வரும் தவறான செய்தி மற்றும் தவறான வீடியோக்களை நம்பாதீர்கள்’’என விளக்கமளித்துள்ளார். இதனால் அவரது ரசிகைகள் நிம்மதியடைந்துள்ளனர். 

சில ஆண்டுகளுக்கு முன், நடிகை யாஷிகா ஆனந்த் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டும்போது ஏற்பட்ட விபத்தில், அவரது தோழி மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் சக்தி வாசு மதுவிருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி, தகராறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்