Ethirneechal Hari Priya:‘தலைக்கனமா? அப்ப எங்க போனாங்க;யாரும் எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை’ - எதிர்நீச்சல் ஹரிப்பிரியா!
அவர் மட்டும் இல்லையென்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன் - ஹரிப்பிரியா
எதிர்நீச்சல் ஹரிப்பிரியா லிட்டல் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசும் போது, “ எனக்கு அட்வைஸ் பிடிக்காது. காரணம், அந்த சூழ்நிலையில், நாம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கும். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. நான் கஷ்டத்தில் இருக்கும் போது எனக்கு உதவிக்கு வராதவர்கள், எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை.
நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இதை நான் தலைக்கனமாக சொல்ல வில்லை. இந்தப்பயணத்தில் இங்கு சென்றால் இடிக்கும்.. அங்கு சென்றால் வலிக்கும்.. என்று படிப்படியாக கற்று இங்கு வந்திருக்கிறேன். ஆகையால் இனி வரும் காலத்திலும் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன். அட்வைஸ் தேவையில்லை.
அதே போல நானும் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பது கிடையாது. இது போக கர்மா,நேரம் ஆகியவற்றிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவையெல்லாம் நம்மை கொஞ்சம் சுழற்றி விடும். நிறைய விஷயங்களில் நான் முயற்சியை கைவிட்டு இருக்கிறேன். இவர்கள் யாருமே தேவையில்லை. நான் செல்கிறேன் என்றெல்லாம் முடிவெடுத்து இருக்கிறேன். அப்போது டார்வின் அண்ணன் என்பவர்தான், எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர், இங்கு தவறு செய்தவர்களே தைரியமாக வாழும் போது, நீ வாழ்வதற்கென்ன என்று சொன்னார். அதை நீ சந்திக்க வேண்டும். தவறு செய்யாத நீ ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டார். அதனால்தான் இப்போது நான் இந்தத்துறையில் இருப்பதற்கான காரணம்” என்று பேசினார்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்