Durai sudhakar On Elon Musk: ‘நன்றிடா எலான் மாப்ள..இளநீருக்கு அம்பாசிட்டரான்னு கேக்குறாங்க’ - வைரல் மீம் நடிகர் பேட்டி!
Durai sudhakar On Elon Musk: இதனை நான் ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன். இந்த திரைப்படம் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படம். இந்தத்திரைப்படத்தின் புகைப்படத்தை ஷேர் செய்த எலான் மஸ்க்கிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். - வைரல் மீம் நடிகர் பேட்டி!
‘ஓபன் ஏஐ’ நிறுவனத்துடன், பிரபல நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இணைவதாக அறிவித்தது. இதற்கு எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆப்பிள் நிறுவனம் சாதரண பயனர்களின் தரவுகளை இதன் மூலமாக ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது என்றும் விமர்சித்திருந்தார்.
அத்துடன் அதனை கிண்டலாக வெளிப்படுத்தும் விதமாக, அவர் 2017-ல் வெளியான ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சியை, மீம் ஆக பகிர்ந்தார். இது உலக அளவில் கவனம் பெற்று ட்ரெண்டானது. இந்த நிலையில் தப்பாட்டம் பட மீம் உலக அளவில் பரவியது குறித்து அப்படத்தின் நடிகர் துரை சுதாகர் பேசி இருக்கிறார்.
உலகம் முழுக்க சென்று விட்டது; இதனை நான் ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன்.
எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய பெயர் துரை சுதாகர். நான் ‘களவாணி 2’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் நடித்த தப்பாட்டம் திரைப்படத்தின் போஸ்டரை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது உலக நாடுகளில் இருக்கும் நம்முடைய மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்து இருக்கிறது. அவர்கள் இது குறித்து என்னிடம் கேட்டு விசாரித்தனர்.
இதனை நான் ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன். இந்த திரைப்படம் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட படம். இந்தத்திரைப்படத்தின் புகைப்படத்தை ஷேர் செய்த எலான் மஸ்க்கிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்புகைப்படத்தை அவர் அளவிற்கு கொண்டு சேர்த்த சமூக வலைதளங்கள், மீம் கிரியேட்டர்கள், ஊடகங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்த சப்ஜெக்ட்டிற்குள் செல்லவில்லை. எங்களுக்கு பெரு மகிழ்ச்சி
மீம் கிரியேட்டரகள் ஆப்பிள் கம்பெனியை கிண்டல் செய்யும் விதமாக இந்தப்புகைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நான் அந்த சப்ஜெக்ட்டிற்குள் செல்லவில்லை. எங்களுடைய திரைப்படத்தின் புகைப்படத்தை எலான் மஸ்க் ஷேர் செய்திருந்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்தப்புகைப்படத்தை நாம் ஆபாசமாக பார்க்க வேண்டிய தேவையில்லை.
இந்தப்படம் பறையிசை பற்றியும், கணவன் மனைக்குள் சந்தேகம் என்ற ஒன்று வந்து விட்டால், என்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியும் கருவாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்தப்படத்தை ஷேர் செய்த பின்னர், பலர் என்னிடம் வந்து நீங்கள் இளநீருக்கு அம்பாசிட்டர் ஆகப்போகிறீர்களா என்று கேட்டு வருகின்றனர். இந்தப்புகைப்படத்தை நாம் ஆபாசமாக பார்க்க வேண்டிய தேவையில்லை. ஒரு இளநீர் குடிக்கும் போது, கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படுத்தும் படமாகவே இந்தப்புகைப்படம் அமைந்திருக்கிறது.” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்