தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Dulquer Salman To Play A Lead Role In Jason Sanjay Directorial Debut

Jason Sanjay: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் நாயகனாக நடிக்கும் வாரிசு ஹீரோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 23, 2024 01:57 PM IST

தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் பிரபல மலையாள இளம் ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஹீரோ குறித்து வெளியான தகவல்
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் ஹீரோ குறித்து வெளியான தகவல்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக இருப்பதாக கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது. ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அவரது படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து வருகின்றன.

இதையடுத்து விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாறப்போவதாக அறிவத்திருப்பதால், சஞ்சயின் படத்தி்ல நடிப்பார் எனவும் கூறப்பட்டது. இந்த வரிசையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் மலையாள சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறாராம்.

மலையாள ஹீரோவாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு இந்த இருமொழிகளிலும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் துல்கர் சல்மான், ஜேசன் விஜய் படத்திலும் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தக்லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன், அபிராமி, நாசர், கெளதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலரும் நடித்து வருகிறார்கள்.

தெலுங்கிலும் லக்கி பாஸ்கர் என்ற படத்தில் துல்கர் சல்மானை பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ளார்.

முன்னதாக, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கவின், ஹரீஷ் கல்யாண், அதர்வா முரளி ஆகியோரின் பெயர் அடிபட்டது. இவர்களை தொடர்ந்து இந்த லிஸ்டில் விக்ரம் மகன் துருவ் விக்ரம், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஆகியோர் பெயர் அடிபட்டது.

இதன்மூலம் அவரது படம் வாரிசுகளின் ராஜ்ஜியமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் பெயரும் இதில் இணைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்