Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!-dr k kantharaj latest interview about raadhika sarathkumar hidden camera revelation - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 07, 2024 07:41 AM IST

Raadhika: படத்திற்காக தேர்வு செய்த போது, அவரது துணை இயக்குனரான பாக்யராஜுக்கு ராதிகாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதனால், அவர் அந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா ஒரு கிராமப்பெண் இப்படித்தான் இருப்பார் என்று கூறி, ராதிகாவை தேர்வு செய்தார். - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!
Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

மார்க்கெட்டில் இல்லாத ராதிகா

இது குறித்து மெட்ரோ மெயில் சேனலுக்கு அவர் பேசும் போது, “ அண்மை காலமாக ராதிகா மார்க்கெட்டில் இல்லாமல் இருந்தார். இப்போது இந்த ஹேமா அறிக்கை குறித்த பரபரப்பில் நுழைந்து, இது போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளை சொல்லி, மீண்டும் தானும் மார்க்கெட்டில் இருக்கிறேன் என்பதை கூறியிருக்கிறார்.

ராதிகா
ராதிகா

உண்மையில் அவர் எதிர்பார்த்தது விளம்பரம். அது அவருக்கு கிடைத்துவிட்டது. தொடர்ந்து, சீரியல்களில் நடித்து வந்தவர் பிரேக்கில் இருந்தார். தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதற்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இந்த சர்ச்சையில் நுழைந்தார். அவர் எதிர்பார்த்த விளம்பரம் கிடைத்துவிட்டது. அவர் எதிர்பார்த்தது தற்போது நடந்து விட்டது இப்போது, எல்லோரும் ராதிகாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா?

அப்பாவின் ஆதரவில் நுழைந்த ராதிகா

அவர் சினிமாவில் அவரது அப்பாவான எம் ஆர் ராதாவின் மகள் என்பதின் அடிப்படையில்தான் நுழைந்தார். பாரதிராஜா அவரை படத்திற்காக தேர்வு செய்த போது, அவரது துணை இயக்குனரான பாக்யராஜுக்கு ராதிகாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதனால், அவர் அந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை.

ஆனால், பாரதிராஜா ஒரு கிராமப்பெண் இப்படித்தான் இருப்பார் என்று கூறி, ராதிகாவை தேர்வு செய்தார். அவரது எண்ணத்தின்படியே படம் மக்களுக்கு பிடித்து, திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அந்தக் காலத்தில் ஆல்பத்தை காட்டித்தான் வாய்ப்பு கேட்பார்கள். அப்படித்தான் ராதிகாவின் அம்மாவும், பாரதிராஜாவிடம் ராதிகாவின் ஆல்பத்தை காட்டி வாய்ப்பு கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

கவர்ச்சி புகைப்படங்கள்

அதிலும் நிச்சயமாக கவர்ச்சி புகைப்படங்கள் இருந்திருக்கும். ராதிகாவும் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் இரண்டு, மூன்று மலையாள படங்கள் இருக்கின்றன.அந்த அளவுக்கு வேறு யாராலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது. முத்தக்காட்சிகளிலெல்லாம் நடித்திருக்கிறார். பச்ச ஆபாசமான காட்சிகளிலெல்லாம் நடித்திருக்கிறார். அவர் அப்படித்தான் திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

 

ராதிகா
ராதிகா

அவர் தற்போது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார். அவரிடம் நான் கேட்கக் கூடிய ஒரே கேள்வி அவரது கணவர் முன்னதாக நடிகர் சங்க தலைவராக இருந்தார். அவரிடம் இதுகுறித்து பேசினீர்களா? கேட்டீர்களா என்பதுதான். இவர் சொல்லும் காலத்தில் கேரவனே இருந்திருக்க வாய்ப்பில்லை அப்படி இருக்கும் பொழுது எப்படி இவர் சொல்லி இருக்கும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்.. உண்மையில் இந்த சர்ச்சையில் ட்ரெண்டிங்கில் இருக்கக்கூடிய நடிகர்கள் யாருமே குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. எல்லாம் காயலாங் கடைக்குப் போன நடிகைகள்தான் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்கள். எல்லாம் விளம்பரத்திற்காகத்தான்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.