தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Double Tuckerr: குழந்தைகளை கவர்ந்த டபுள் டக்கர்; 2 வது வாரத்தில் நுழைந்த டபுள் டக்கர்! - வசூல் எவ்வளவு தெரியுமா?

Double Tuckerr: குழந்தைகளை கவர்ந்த டபுள் டக்கர்; 2 வது வாரத்தில் நுழைந்த டபுள் டக்கர்! - வசூல் எவ்வளவு தெரியுமா?

HT Tamil Desk HT Tamil
Apr 15, 2024 07:09 PM IST

குழந்தைகளின் ஆதரவோடு வெற்றிகரமாக 2வது வாரம் திரையரங்குகளில் ஓட்டும் டபுள் டக்கர்! - வசூல் எவ்வளவு தெரியுமா?

டபுள் டக்கர்!
டபுள் டக்கர்!

ட்ரெண்டிங் செய்திகள்

புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரிப்பில், மீரா மஹதி இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் இப்படம்வெளியானது.

இந்தப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்டோர் பலர் நடித்து இருந்தார்கள்.

கலகலப்பான ஃபேண்டசி ஆக்ஷன் ஜானரில் வெளியான இந்தப்படம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறதாம். பெரும்பான்மையானோருக்கு இந்தப்படம் பிடித்திருக்கும் நிலையில், குழந்தைகளையும் படம் வெகுவாக கவர்ந்து இருப்பதாக தெரிகிறது. தற்போது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப்படம் இது வரை ஒரு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

கதையின் கரு:

நாயகன் தீரஜ், சிறுவயதிலேயே ஒரு விபத்தில் தனது தாய், தந்தையை இழந்து விடுகிறார். அந்த விபத்தில் தீரஜிற்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டு விட, அது மறையாத தழும்பாக அவரது முகத்தில் இருந்து விடுகிறது. இந்த நிலையில் அந்த முகத்தை மறைத்து வாழ்ந்து வருகிறார் தீரஜ்.

இதற்கிடையே, படத்தில் பிரபல வில்லனான மன்சூர் அலிகானின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட்டின் மீது தீரஜிற்கு காதல் முளைக்கிறது. ஆனால் இந்த காதலை ஸ்மிருதி ஏற்க மறுக்கிறார்

வாழ்க்கையே வெறுத்துப் போகும் தீரஜ், தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால், அவரது உயிர் பிரிவதற்கு முன்பே லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு வான் தேவதைகள் அவரது உயிரை எடுத்து விடுகின்றனர்.

இந்த நிலையில், தன்னுடைய உயிரை எப்படி நீங்கள் எடுக்கலாம் என்று வான் தேவதைகளிடம் தீரஜ் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரின் உடலை யாரோ சிலர் திருடி விடுகிறார்கள்.

இதனையடுத்து தற்காலிகமாக ஒரு உடம்பில் தீரஜின் உயிரை இருக்க வைக்கும் வான் தேவதைகள், அவரது உடலை கண்டுபிடித்தார்களா.? தீரஜ்ஜின் காதல் என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை

நாயகன் தீரஜ், இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்து படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, காயம்பட்ட கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு கவனிக்க வைக்கிறது. நாயகி ஸ்மிருதி வெங்கட், கொடுத்த கதாபாத்திரத்திற்கு தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் நியாயம் செய்திருக்கிறார்.

ரைட் - லெஃப்ட் என்ற கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கும் முனீஸ்காந்த் மற்றும் காளி வெங்கட் இருவரும் படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறார்கள். வித்யாசாஹரின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்க பலமாக பெரும் தூண்களாக இருக்கிறது. திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்து இருந்தால், பெரும்பான்மையான மக்களுக்கு படம் பிடித்திருக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்