டான் படத்தின் சூப்பர் சீன் உருவானது எப்படி? - வீடியோ வெளியிட்ட படக்குழு
டான் படத்தின் வீடியோவை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு உள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டான்.
இதில் பிரியங்கா மோகனன் நாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கல்லூரி பின்னணியில் தந்தை மற்றும் மகன் பாச கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. படம் ரசிகர்களுக்கு மத்தியில பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது.
திரையரங்குகளில் வெளியான இந்த படம் தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூரி புரியாத மொழியில் பேசி நகைச்சுவை செய்து இருந்தார். அவர் செய்த நகைச்சுவை, ரசிகர்களை பயங்கரமாக சிரிக்க வைத்தது
இந்த காட்சியை படமாக்கிய மேக்கிங் வீடியோவை சூரி தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ ரசிகர்களை சிரிக்க வைப்பது போல இருப்பதால், இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியை இப்படி தான் எடுத்தீங்களா? என கேட்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்