தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premji Wife: காதல் திருமணமா?.. பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் யார் தெரியுமா?

Premji Wife: காதல் திருமணமா?.. பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் யார் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jun 10, 2024 09:07 AM IST

Premji Wife: பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் இந்து யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்துவிற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளதாம்.

பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் யார் தெரியுமா?
பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் யார் தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

களைகட்டிய திருமணம்

பிரேம்ஜியின் மனைவியின் பெயர் இந்து என்று வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்து யார்?

45 வயதாகியும் ஏன் பிரேம்ஜி திருமணம் செய்யாமல் இருக்கிறார்? என்ற பேச்சு தான் எங்கு பார்த்தாலும் அவரை அனைவரும் கேட்பார்கள். ஆனால் தான் முரட்டு சிங்கிள் என நகைச்சுவையாக சொல்லிவிட்டு சென்றுவிடுவார். இதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில் திடீரென பிரேம்ஜி திருமண அறிவிப்பு வெளியானது. 

காதல் திருமணமா?

அதனால் ஒரு வேலை அவர் காதல் திருமணம் செய்து இருப்பாரோ என அனைவருக்கும் சந்தேகம் எழுந்து உள்ளது. 

இந்நிலையில் பிரேம்ஜி திருமணம் செய்து இருக்கும் மணப்பெண் இந்து யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்துவிற்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ளதாம். அவர் இதற்கு முன்பாக வங்கி துறையில் பணியாற்றி இருகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. 

பிரேம்ஜி படங்கள்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பிரேம்ஜி, கோட் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு மற்றும் அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

சினிமாவில் நுழைந்தது எப்படி?

பிரபல இயக்குநரும், இசைக்கலைஞருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இசையமைப்பதில் முதன்மையான ஆர்வம் கொண்ட இவர், திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவரது உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம், உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பின்னணிப் பாடகராக மாறினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களில் பிரேம்ஜி பாடி இருக்கிறார். அதே போல அவர் இசையமைப்பில் சிலவற்றை ஒலிப்பதிவு ஆல்பங்களுக்காக ரீமிக்ஸூம் செய்து இருக்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்