Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!

Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!

Divya Sekar HT Tamil
Sep 06, 2024 09:44 AM IST

Sarkunam : சற்குணம் வாகை சூடவா என்னும் படம் இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்று வெற்றி வாகை சூடிய பெருமையும் இவருக்கு உண்டு. இவர் தான் சினிமாக்கு எப்படி வந்தேன் என்பதை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். அது குறித்து இதில் பார்க்கலாம்.

Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!
Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!

இவர் தான் சினிமாவுக்கு வந்தது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ”இதயம், நான் பேச நினைப்பதெல்லாம் போன்ற படங்கள் தான் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. முக்கிய காரணம் என்றால் குடும்ப சூழ்நிலை தான்.

படிப்பில் அவ்வளவு ஆர்வமும் இல்லை

எங்க அப்பா வெளிநாட்டில் இருந்தார். நான் நன்றாக படிப்பேன் என நம்பினார். ஆனால் நான் 10 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதை திரும்பவும் எழுதினேன் ஆனால் அதிலும் தேர்ச்சியடையவில்லை. அதன்பிறகு ஐடிஐ சேர்ந்தேன். எனக்கே ஒருமாறி இருந்தது. இவ்வளவு நமக்கு சப்போர்ட் இருந்தும் ஐடிஐ தான் எடுக்க முடிந்தது. எனக்கு அந்த படிப்பில் அவ்வளவு ஆர்வமும் இல்லை.

நமக்கு என்ன தான் திறமை இருக்கு அப்படினு பார்க்கும் போது அதிகமா நான் சினிமா பார்ப்பேன். ஒரு படம் பார்த்துட்டு அதை நண்பர்களிடம் சொல்லும் போது படம் பார்க்கிற மாறியே சொல்றனு நண்பர்கள் சொன்னார்கள். அப்போ தான் சினிமாக்கு போகலானு ஆசை வந்தது.

தினமும் காலையில் பீச்

அசிஸ்டன்ட் டைரக்டராக நான் ஆறு வருடம் முயற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஆர்.பி சவுத்ரி அவர்கள் மிகவும் பிரபலமாக இருந்தார். நான் என் கிராமத்திற்கு செல்லும்போது கூட அங்கு உள்ளவர்கள் ஆர்.பி சவுத்ரி புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருகிறாராமே அவரிடம் சென்று வாய்ப்பு கேட்க வேண்டியதானே என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு கிராமத்தில் இருப்பவர்களுக்கு கூட ஆர்பி சவுத்ரி நன்கு அறியப்பட்டார்.

எனவே நான் ஆர்பி சவுத்ரி சாரை மீட் பண்ண வேண்டும் என்று எண்ணி அவர் எங்கு எல்லாம் செல்வார்கள் என அறிந்தேன். அப்பொழுதுதான் அவர் தினமும் காலையில் பீச் வருகிறார் என்பது தெரிந்து கொண்டேன்.

அழகப்பன் அறிமுகம்

நான் வடபழனி கோயிலுக்கு பின்புறம் தங்கி இருந்தேன். தினமும் காலையில் அவரை சந்திக்க பீச்சுக்கு செல்வேன். அவர் அங்கு வரும்போது நான் வணக்கம் வைப்பேன். அவரும் கையசைத்து வணக்கம் சொல்வார். இப்படி சொல்லியாவது அசிஸ்டன்ட் டைரக்டராக அவரிடம் சேர்ந்து விட வேண்டும் என தினமும் சென்று வணக்கம் வைப்பேன்.

அதுமட்டுமல்லாமல் அங்கு என்னை போல் இன்னும் நிறைய பேர் சவுத்ரி ஐயா அவர்களுக்காக காத்திருப்பார்கள். அப்போது சவுத்ரி ஐயாவுடன் ஏ ஆர் அழகப்பன் உடன் வருவார். அங்கு என் கிராமத்தை சேர்ந்த ஒருவர் வாக்கிங் வருவார். அவர் அழகப்பன் அவர்களை அறிந்ததால் அவர் என்னை அழகப்பன் சாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

சிறுகதை புத்தகம் வெளியீடு

அதன் பிறகு நான் அழகப்பன் அவர்களை பின் தொடர ஆரம்பித்தேன். ஆனால் அவர் என்னிடம் என்னை பின்தொடர்வது வீண் நான் படம் பண்ணும் போது வா என கூறிவிட்டார். பின்னர் நான் ஒரு புத்தகம் எழுத முடிவு செய்தேன். வாய்ப்பு கேட்க வேண்டும் என்றால் ஏதாவது சிறுகதையாவது எழுதி இருக்க வேண்டும் என நினைத்து ஒரு புத்தகத்தை எழுதினேன். அந்த புத்தகம் எனக்கு திருப்தி இல்லை இருந்தாலும் அது எனக்கு ஒரு அடையாளம் என அவர் கூறினார்.

பின்னர் ஒரு மாதம் கழித்து அழகப்பன் அவர்களை சந்தித்தபோது அவர் அப்பவே சொன்னேன் மறுபடியும் எதற்கு வந்தாய் என கேட்டார். அதற்கு நான் இதுபோல ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். அதை நீங்கள் தான் வெளியிட வேண்டும் என கூறினேன். இதன் மூலம் அவர் யாரிடமாவது என்னை அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையில் செய்தேன்.

நான் புத்தகம் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். எனது உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வருகை தந்திருந்தார்கள். ஆனால் அழகப்பன் அவர்கள் மட்டும் வரவில்லை ஏனென்றால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அசிஸ்டன்ட் டைரக்டராக வாய்ப்பு

ஆனாலும் அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அந்த உடையிலேயே இந்நிகழ்ச்சிக்கு வந்தார். வந்து என்னிடம் ஒன்று கூறினார் ஒரு நிகழ்ச்சிக்கு ஒருவரை அழைத்து வராமல் போனால் அதன் வலியும் வேதனையும் எனக்கு தெரியும். நான் முன்பு இதே போன்ற ஒரு சூழ்நிலையை அனுபவித்து இருக்கிறேன். அதனால் தான் இந்த நிகழ்ச்சியை தவறவிடாமல் நான் வந்திருக்கிறேன் என கூறினார். அதேபோல எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வாய்ப்பு தருவதாக கூறினார். அதேபோல என்னை ரைட்டர் கலைமணி அவர்களிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்த்துவிட்டார். அவரிடம் தான் கதை, திரைக்கதை எழுதுவதை கற்றுக் கொண்டேன்.

அழகப்பன் அவர்களின் மகன் தான் ஏ.எல். விஜய் அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் பல விளம்பர படங்களில் சேர்ந்து பணிபுரிந்தேன். முதல் படமாக அவரின் படம் தான் கிரீடம் அஜித் அவர்கள் நடித்தது. அதன் மூலம் தான் நான் அசோசியேட் ஆக பணிபுரிந்தேன்” எனக் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.