Avatar Release Delay: தள்ளிப்போகும் அவதார் படங்களில் அடுத்தடுத்த பாகங்கள்-disney decided to delay the release of avatar sequel - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Avatar Release Delay: தள்ளிப்போகும் அவதார் படங்களில் அடுத்தடுத்த பாகங்கள்

Avatar Release Delay: தள்ளிப்போகும் அவதார் படங்களில் அடுத்தடுத்த பாகங்கள்

Aarthi V HT Tamil
Jun 14, 2023 04:50 PM IST

அவதார் படங்களின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.

அவதார்
அவதார்

மற்ற மூன்று பாகங்களின் ரிலீஸ் தேதியையும் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதனிடையே அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, அவதார் 3 டிசம்பர் 19, 2025 ஆம் ஆண்டும், அவதார் 4 டிசம்பர் 21, 2029 ஆம் ஆண்டு வெளியாகிறதாம். மேலும் அவதார் 5 டிசம்பர் 19, 2031 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது.

அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்ட் வேலைநிறுத்தம் மற்றும் தயாரிப்பில் தாமதம் உள்ளிட்ட காரணத்தினால் அவதார் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் இன்னும் உலகிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் பெற்று இருக்கிறது. அதே போல் கடந்த ஆண்டு வெளியான அவதார் தி வே ஆஃப் வாட்டர் உலக வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், சிசிஎச் பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அவதார் 2 படம் வெளியானது. பண்டோரா உலகின் மக்களுக்கு தன்னால் ஆபத்து நேருகிறது என்பதை அறியும் ஹீரோ ஜேக் சல்லி, தன்னுடைய குடும்பத்தோடு கடல்வாசிகள் வாழும் நவி உலகத்திற்கு செல்கிறார். அவர்களுக்கு வில்லனான கர்னலாலால் என்ன ஆபத்து நடக்கிறது என்பே இப்படத்தின் கதையாக அமைந்து உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.