HT Exclusive: ‘அப்பா நெஞ்ச புடுச்சிட்டு உட்கார்ந்தப்ப.. சும்மா யாரும் தூக்கி கொடுக்கல’- விக்ரமன் மகன் சிறப்பு பேட்டி!
HT Exclusive: “அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாம போன பின்னாடி, நானே அப்பாட்ட போய் நான் வேலைக்கு போறேன். என்னால முடிஞ்சத கொடுத்து சப்போர்ட் பண்றேன்னு சொன்னேன். ஆனா” - விக்ரமன் மகன் சிறப்பு பேட்டி!

அழகும், அமைதியும், ஆசுவாசமும் நிறைந்த இயக்குநர் விக்ரமன், தன்னுடைய படங்களையும் அவ்வாறே வடிவமைத்தார். அவர் இயக்கிய படங்களும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், இன்றளவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டிருக்கின்றன.அவரின் மகன் விஜய் கனிஷ்கா தற்போது ஹீரோவாகி இருக்கிறார். அவர் அறிமாகி இருக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம், வருகிற மே 31ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக அவரிடம் உரையாடினேன்.
ரஜினி, விஜய், சூர்யா அப்படின்னு பெரிய நடிகர்கள் எல்லோரும் இறங்கி வந்துருக்காங்க? இவ்வளவு பெரிய படையோட பெரிய என்ட்ரி.. பயமா இருக்கா?
அப்பாவுக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்ல. கே.எஸ். ரவிக்குமார் சார்தான் பெரிய ஸ்டார்ஸோட பிளஸ்சிங்ஸ் எனக்கு கிடைக்கும்னு நினைச்சாரு. அவராதான் அவங்கள போன்ல கூப்பிட்டு, விக்ரமன் பையன் நடிகனா அறிமுகமாறாரு..நீங்க கூப்பிட்டு பிளஸ் பண்ணனும் கேட்டுக்கிட்டார். விஜய் சாரும், சூர்யா சாரும் முன்பு அப்பா கூட வேலை பார்த்ததால, உடனே ஒத்துக்கிட்டாங்க.
