Vetrimaaran: காப்பி.. அட்டர் காப்பி..வெற்றிமாறன் செய்த கோல்மால்.. பொல்லாதவன் கிளைமேக்ஸ் காட்சி உருவான விதம்!
பொல்லாதவன் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து வெற்றிமாறன் சில வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரன் அஸ்வின் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி இது
பொல்லாதவன் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, அதனுடைய கிளைமாக்ஸ் காட்சியில், ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். உண்மையில் நாங்கள், அந்த சமயத்தில் உச்சபட்ச அழுத்தத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நாங்கள் தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருந்தோம். அந்த சமயத்தில் தயாரிப்பாளர் சீக்கிரம் முடியுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை என்னுடைய நண்பன் மணீதான் இதோ முடித்தாயிடுச்சு.. அதோ முடித்தாயிற்று என்று சொல்லி சமாதானப்படுத்தி, அவர் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டான். அந்த அளவுக்கு அழுத்தத்தில் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்
அன்று அதை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனால் மெல்கின்சன் படத்தில் வரக்கூடிய ஒரு முக்கியமான காட்சியை அப்படியே காப்பி அடித்து, இதன் கிளைமேக்ஸ் காட்சியில் பொருத்திவிட்டேன்.அதன் பின்னர் அதை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன். இன்றும் சில விஷயங்களை நினைத்து நான் கவலைப்படுகிறேன், வருத்தப்படுகிறேன் என்றால் அதில் இதுவும் ஒரு முக்கியமான விஷயம்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்