தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Sundar C: ‘அவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க.. ஓடி வந்து அழுதா .. ஆனா’ - சுந்தர் சி

Director Sundar c: ‘அவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க.. ஓடி வந்து அழுதா .. ஆனா’ - சுந்தர் சி

Kalyani Pandiyan S HT Tamil
May 24, 2024 07:41 AM IST

Director Sundar c: நான் எதற்கு சொல்லவேண்டும் என்று சொல்லி, நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன். எங்களின் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பத்திரிகைகள் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று எழுதி விடுவார்கள். - சுந்தர் சி

Director Sundar c: ‘அவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க.. ஓடி வந்து அழுதா .. ஆனா’ - சுந்தர் சி
Director Sundar c: ‘அவளுக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்லிட்டாங்க.. ஓடி வந்து அழுதா .. ஆனா’ - சுந்தர் சி

ட்ரெண்டிங் செய்திகள்

ஓடி வந்து அழுத குஷ்பு:

இது குறித்து அவர் பேசும் போது, “ கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் நாங்கள் டேட்டிங்கில் இருந்தோம். அப்போது அடிக்கடி சண்டை போடுவோம். ஆறு மாதங்கள் பேசாமல் இருப்போம். அப்போதே குஷ்பு சண்டை போட்டுவிட்டால், மீடியாவை கூப்பிட்டு நீங்களும் நானும் பிரிந்து விட்டோம் என்று சொல்லிவிடுங்கள் என்று சொல்வார். ஆனால் நான் எதற்கு சொல்லவேண்டும் என்று சொல்லி, நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருப்பேன். எங்களின் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பத்திரிகைகள் நாங்கள் பிரிந்து விட்டோம் என்று எழுதி விடுவார்கள். 

அடுத்த நாள் பார்த்தால், நாங்கள் ஒன்றாக சேர்ந்து பார்ட்டிக்கு செல்வோம். ஒரு கட்டத்தில்மாறி சண்டை போட்டுக் கொண்டே இருந்து, உனக்கு நீ எனக்கு நான் என்று முடிவாகிவிட்டது. கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டோம். பிப்ரவரி 27ஆம் தேதி கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம். மார்ச் 9ஆம் தேதி கல்யாணம் செய்து கொண்டோம். கல்யாணத்திற்கு மொத்தமாகவே 50 பத்திரிகைகள் தான் அடித்தோம். கல்யாண பத்திரிகையில், முகூர்த்த நேரத்தை 45 நிமிடம் முன்னதாகவே பதிவிட்டு விட்டார்கள். 

கைவிடாத காதல்:

இதனையடுத்து கல்யாணத்திற்கு வந்த பெரும்பான்மையானோர், முன்னதாகவே வந்து விட்டார்கள். ஆனால் நாங்கள் லேட்டாக வந்தோம். நான் கல்யாணத்திற்கு வரும்போது, லிஃப்ட் பிரச்சினை ஏற்பட்டு நின்றது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மறக்க முடியாத சம்பவம் என்றால், அது என்னுடைய முதல் குழந்தை பிறந்ததுதான். அது என்னை விட குஷ்புவுக்கு மிக மிக எமோஷனல் ஆன தருணம். காரணம் என்னவென்றால், குஷ்புவுக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர் ஒருவர், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார். 

கல்யாணத்திற்கு முன்னதாக அவர் அப்படி சொன்னவுடன், குஷ்புவிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. இதை என்னிடம் வந்து சொல்லி, நீங்கள் வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் எனக்கு அதில் உடன் பாடில்லை. இதையடுத்து நாங்கள் இருவரும் நமக்கு குழந்தை கிடையாது என்று மனதில் பிக்ஸ் செய்து கொண்டு கல்யாணம் செய்து கொண்டோம்.  ஆனால் கடவுள் வேறு திட்டம் வைத்திருந்தார். எங்களுக்கு தேவதைகள் போல இரண்டு குழந்தைகள் பிறந்தன.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்