DIRECTOR SUSEENTHIRAN JOURNEY: லகான் இன்ஸ்பிரேஷன்..எல்லாம் உண்மை கதை - வெண்ணிலா கபடி குழு வெற்றி பற்றி சுசீந்திரன்
Director Sueenthiran Journey: அமீர்கானின் லகான் இன்ஸ்பிரேஷன் மூலம் கபடியை பின்னணியாக வைத்து வெண்ணிலா கபடி குழு பட கதையை உருவாக்கினேன். எனது தந்தை, எனது சொந்த காதல், அண்ணனுக்கு நடந்த விஷயங்கள் என இந்த படத்தில் வருவது எல்லாம் உண்மை கதை தான் என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சுசிந்திரன். 2009இல் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டானதுடன், தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்கள் உருவாகும் ட்ரெண்டை உருவாக்கியது.
இதையடுத்து தனது சினிமா பயணம், வெண்ணிலா கபடி குழு உருவாக்கியதன் பின்னணி பற்றஇ யூடியூப் சேனலில் விரிவாக பேசியுள்ளார்.
12 ஆண்டுகள் முயற்சி
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக மேலாக வெற்றிகரமாக இயக்குநராக இருந்து வரும் சசீந்திரன் தனது சினிமா பயணம் பற்றி கூறியதாவது:
"ப்ளஸ் முடித்த பிறகு சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தேன். பேச்சிலளார மூன்று ஆண்டு முயற்சிக்கு பிறகு எழுத்தாளர் பிரசன்ன குமார் மூலம் இயக்குநர் சபாபதி அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து ஜெயா டிவி, சன்டிவியில் சீரியல்களில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். பின்னர் இயக்குநர் எழிலுடன் தீபாவளி படத்தில் வேலை செய்தான். இவருடனும் மூன்று ஆண்டுகள் பயணம் செய்தேன். இதன் பின்னர் ஒரு வருட முயற்சிகளுக்கு பிறகு இயக்குநர் ஆனேன். மொத்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இது நடந்தது.
உதவி இயக்குநராக இருந்தபோது கையில் காசு மட்டும் இருக்காது. மற்ற எல்லா விஷயங்களும் கிடைக்கும். அதேபோல் காத்திருப்பு சிறந்த அனுபவத்தை தரும்.
பள்ளி படிக்கும் வரை விஜயகாந்தின் தீவிர ரசிகன் நான். சினிமாவுக்கு வந்ததுக்கு பின்னர் எல்லா நடிகர்களையும் ரசிக்க ஆரம்பித்தேன்.
விஜயகாந்திடம் வந்த போன் கால்
தனது மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் விஜயகாந்த். அப்போது அவர் படத்துக்கு வைத்திருந்த டைட்டில் ரைட்ஸ் எனது தயாரிப்பு நிறுவனம் பெயரில் இருந்தது. இதற்காக என்னிடம் போனில் பேசிய அவர், டைட்டிலை பயன்படுத்தி கொள்வதற்காக கேட்டார். உடனடியாக டைட்டிலை கொடுத்துவிட்டேன்.
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிடுவதற்காக அவரை சந்தித்தேன். அப்போது கண்ணுப்படபோகுதய்யா ஷுட்டிங்கின் போது பாட்டி மற்றும் தங்கையுடன் சந்தித்து பற்றி பேசியபோது அக்கறையுடன் என்னை பற்றி விசாரித்தார்.
சபாபதி சாரிடம் பிலிம் மேக்கிங், எடிட்டிங் விஷயங்களை நன்கு கற்றுக்கொண்டேன். எழில் பொருமையானவர். எந்தவொரு விஷயத்தையும் சிம்பிளாக, கூலாக ஹேண்டிக் செய்வார். அதையெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.
வெண்ணிலா கபடி குழு உருவான விதம்
ஹீரோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் பல வைத்திருந்தேன். அந்த காலகட்டத்தில் பருத்திவீரன், காதல், சென்னை 28 போன்ற புதுமுகங்களை வைத்து வந்த படங்கள் எல்லம் ஹிட்டாகின. எனவே புதுமுகங்கள் வைத்து கதை ஒன்றை உருவாக்க முடிவு செய்தான்.
அந்த சமயத்தில் அமீர்கானின் லகான் பார்க்க நேர்ந்தது. உடனே விளையாட்டை மையமாக வைத்து கதை எழுதலாம் என்று நினைத்தபோது அப்பா கபடி பிளேயர், அவர் சொன்ன நிறைய விஷயங்களை மனதில் வைத்து கதை எழுத தொடங்கினேன்.
எல்லாம் உண்மை கதை
வெண்ணிலா கபடி குழு படத்தின் வரும் விஷயங்கள் எல்லாம் அப்பா வாழ்க்கையில் நடந்த விஷயங்கள். அதேபோல் அந்த படத்தில் வரும் காதல் சம்மந்தப்பட்ட காட்சிகளை என வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை சுவாரஸ்யமாக மாற்றி அமைத்தேன். படத்தின் க்ளைமாக்ஸ் எனது நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்தன். இப்படிதான் வெண்ணிலா கபடி குழு உருவாக்கினேன்." என்றார்.
வெண்ணிலா கபடி குழு மூலம் நடிகர் விஷ்ணு விஷால், கிஷோர், சரண்யா மோகன் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இவர்கள் தவிர மேலும் சில நடிகர்களுக்கும் இது முதல் படமாக அமைந்தது. தமிழில் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்