Seenu Ramasamy: ‘அப்படி ஒரு போர்குதிரை முகம்..’ பாலுமகேந்திரா சொல்லிய பரமரகசியம்;முதல் படத்தில் சேது சம்பவம் செய்த கதை!-director seenu ramasamy latest interview about how he choose vijay sethupathi in thenmerku paruvakatru movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seenu Ramasamy: ‘அப்படி ஒரு போர்குதிரை முகம்..’ பாலுமகேந்திரா சொல்லிய பரமரகசியம்;முதல் படத்தில் சேது சம்பவம் செய்த கதை!

Seenu Ramasamy: ‘அப்படி ஒரு போர்குதிரை முகம்..’ பாலுமகேந்திரா சொல்லிய பரமரகசியம்;முதல் படத்தில் சேது சம்பவம் செய்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 19, 2024 04:00 AM IST

ஒரு நடிகருக்கு தேவை அன்புதான். எனக்கு என்னுடைய குருநாதரான பாலு மகேந்திரா ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்திருந்தார். அதாவது இந்த உலகத்தில் இரண்டு விதமான முகங்கள்தான் கலைஞர்களாக பிரபலமானவையாக இருக்கின்றன.

தென்மேற்கு பருவக்காற்று
தென்மேற்கு பருவக்காற்று

இவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு முதல் வாய்ப்பைக்கொடுத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. அவர் கிளப் எஃப் எம் சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக கொடுத்த பேட்டியில், விஜய்சேதுபதியை கதாநாயகனாக தன் படத்தில் கமிட் செய்தது ஏன்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் பேசும் போது, “அன்று எனக்கு சேதுவை பார்த்த உடனேயே பிடித்து விட்டது. அவனின் கண்கள் என்னை மிகவும் ஈர்த்தன. காரணம், அந்தக் கண்களில் அவ்வளவு அன்பு தென்பட்டது. 

ஒரு நடிகருக்கு தேவை அன்புதான். எனக்கு என்னுடைய குருநாதரான பாலு மகேந்திரா ஒரு விஷயத்தை சொல்லிக் கொடுத்திருந்தார். அதாவது இந்த உலகத்தில் இரண்டு விதமான முகங்கள்தான் கலைஞர்களாக பிரபலமானவையாக இருக்கின்றன.

அதில் ஒன்று பூனை மற்றும் புலிகள் வடிவமைப்பு கொண்ட முகங்கள். இன்னொன்று குதிரை முகம். ஆகையால், எந்த ஒரு நடிகரை நான் பார்த்தாலும், எனக்கு முதலில் வருவது பாலுமகேந்திரா சொல்லிக்கொடுத்த இந்த விஷயம்தான். 

அந்த வகையில் நான் முதன் முறையாக விஜய் சேதுபதியை பார்த்தபொழுது, அவனது முகம் ஒரு போர் குதிரை போல தெரிந்தது. என்னுடைய தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு அந்த மாதிரியான ஒரு உறுதியான குதிரையின் முகம் தேவைப்பட்டது. அப்படித்தான் விஜய் சேதுபதி என்னுடைய படத்தில் கமிட் ஆனான்” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.