‘எனக்கே சூடாயிருச்சு.. ஹீரோயினிடம் முத்தம் கேட்டேன்’ ஆர்.வி.உதயக்குமார் சர்ச்சை பேச்சு!
‘ரொம்ப நாள் ஆச்சு ஹீரோயின் கூட உட்கார்ந்து. ரொம்ப வருசம் ஆச்சு. என்னை சுற்றி ஹீரோயின்களாக உட்கார்ந்திருந்த காலம் போய், இப்போ பாருங்க’
இயக்குனர் ஆர்.வி.உதயக்குமார், கும்பாரி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது ஹீரோயின் மகனா குறித்து அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதோ அவருடைய பேச்சு:
‘வயிறு வா வா என்கிறது.. சாதம் போ போ என்கிறது’ இதற்கு மேல் கலையை ரசிக்க முடியாது. கலைஞனுக்கு வயிறு நிரம்பினால் தான் பாடல் இனிமையாக இருக்கும், வசனம் சுகமா இருக்கும், காட்சி அழகா இருக்கும். வயிறு நிரம்பவில்லை என்றால், இதில் எதுவுமே சுகமா இருக்காது.
சாதாரண டீக் கடையில் உட்கார்ந்து கொண்டு, கும்பாரி படத்தை எடுத்திருக்கிறார் என்றால், தயாரிப்பாளரை தான் பாராட்ட வேண்டும். அந்த மாதிரி ஒரு தயாரிப்பாளரை பிடிச்சு கொண்டு வந்தான் பாருங்க ஒரு டைரக்டர், அவன் எவ்வளவு பெரிய வித்தைக்காரனா இருப்பான் பாருங்க?
இந்த மாதிரி லுங்கி கட்டுன புரொடியூசர் இருந்தா சொல்லுங்கப்பா, நானும் கிளம்புறேன். இனியே டீக்கடை டீக்கடை தான் போகணும் போல. வந்த உடனே போக வேண்டும் என்று தான் வந்தேன். ஆரம்பித்ததே தாமதம் தான். வந்ததும் ஒரே ஒரு ஆறுதல் ஜூஸ் கொடுத்தார்கள். அது ஒரு 15 நிமிடத்தை இழுத்து கொடுத்தது. அதன் பின் வந்தவர்களுக்கு அதுவும் கிடைக்கவில்லை.
உள்ளே வந்ததும் பாக்யராஜ் அண்ணன் வந்தாங்க. கட் ப்ரூட்ஸ் கொஞ்சம் கொடுத்தாங்க. தம்பிகள் அதை வேண்டாம் என்றுவிட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அதை நிறைய சாப்பிட முடியாது. சுகரை ஏத்திவிட்ரும். கொஞ்சம் கூட சீரியஸ் இல்லாமல், ஜாலியா இருக்கிற தயாரிப்பாளரையும், டைரக்டரையும் பார்த்தேன், அதுல கொஞ்சம் பசி போயிடுச்சு.
பாக்யராஜ் சார் கொஞ்சம் டென்ஷனா இருந்தார். ‘எதுக்கு இந்த நேரத்தில் வெச்சிருக்காங்க’ என்று கடுப்பாகிட்டார். அவரை நான் தான் சமரசம் செய்து வைத்தேன். இதுவரை, விஐபி.,கள் வருகைக்காக தான் விழா காத்திருக்கும். முதன் முறையாக, ஊடக நண்பர்களுக்காக நாங்கள் காத்திருந்தோம்.
எத்தனை விழாக்களில் எங்களால் நீங்க எத்தனை கொடுமைகளை சந்தித்திருப்பீர்கள். அதற்காக இன்று பத்திரிக்கையாளர்கள் வெச்சு செய்துவிட்டார்கள். பாடல் பார்த்தேன், ரொம்ப அழகா பண்ணிருக்கார். கும்பாரி என்கிற வார்த்தையே எனக்கு தமிழில் தெரியாது. எனக்கு கும்பாரி என்றால் நட்பு என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
படத்தின் இரண்டாவது பாடலை பார்த்தேன், சிறப்பாக இருந்தது. அதன் பிறகும் எனக்கு பசி இருந்தது. அதன் பிறகு ஒரு பாடல் வந்தது. நான்கு இடத்தில் முத்த காட்சி வந்தது. அப்படியே என்னுடைய பசியெல்லாம் மொத்தமா அடங்கிடுச்சு.
மதிய உணவு பசியில் இருந்த தான், இரவு பசிக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். மேடை ஏறியதும், பாக்யராஜ் சார் பேச போனதால், ஹீரோயின் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அதில் கொஞ்சம் பசி போய்விட்டது.
ரொம்ப நாள் ஆச்சு ஹீரோயின் கூட உட்கார்ந்து. ரொம்ப வருசம் ஆச்சு. என்னை சுற்றி ஹீரோயின்களாக உட்கார்ந்திருந்த காலம் போய், இப்போ பாருங்க, இந்த பயலுகளா உட்கார்ந்திருக்கானுங்க. விஜய் விஷ்வா, ஹீரோயினை முதல் முத்தம் கொடுக்கும் போது நன்றாக இருந்தது. இரண்டாவது முத்தம் கொடுக்கும் போது, எனக்கே சூடு ஆனது.
அடுத்தடுத்து என்னை பேச அழைத்தார்கள். ஹீரோயின் அருகில் இருந்ததால், அப்புறம் பேசுறேன் என்று தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு ‘கிஸ்’ கொடுத்தால் தான் பேசுவேன் என்று ஹீரோயினிடம் கேட்டேன். ஓகே சார் என்று சொல்லிடுச்சு. பசியாவது அதாவது.. மெதுவா பார்த்துக்கலாம்,’’
என்று ஆர்.வி.உதயக்குமார் பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்