Pandiarajan:காலைப்பிடித்து கதறிய பாண்டியராஜன்; வாழ்க்கை விளக்கை ஏற்றிய பாக்யராஜ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pandiarajan:காலைப்பிடித்து கதறிய பாண்டியராஜன்; வாழ்க்கை விளக்கை ஏற்றிய பாக்யராஜ்

Pandiarajan:காலைப்பிடித்து கதறிய பாண்டியராஜன்; வாழ்க்கை விளக்கை ஏற்றிய பாக்யராஜ்

Kalyani Pandiyan S HT Tamil
Feb 18, 2023 06:07 AM IST

இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேர்ந்த சுவாரஸ்ய கதையை இயக்குநர் பாண்டியராஜன் பகிர்ந்து இருக்கிறார்

பாண்டியராஜன்
பாண்டியராஜன்

இதோ அவரது பேட்டி!

சுப்பிரமணியன் என்று இயக்குனர் ஒருவர் இருந்தார்; அவர் எழுத்தாளர் தூயவனின் உதவியாளராக இருந்தார். அவரின் உதவியாளராக நான் இருந்தேன்; ஒரு நாள் பாக்யராஜ் சார் வசனம் எழுதிக்கொண்டிருந்தார். அதை மீண்டும் ஒரு காப்பியாக எழுத வேண்டும். ஆகையால் உதவி இயக்குநரை அவர் தேடினார். ஆனால் அங்கு யாரும் இல்லை. உடனே சுப்பிரமணியன் அதை என்னிடம் கொடுக்குமாறு இயக்குநரிடம் சொல்லிவிட்டார்; நான் அதை இண்டோர், அவுட்டோர் உள்ளிட்ட தகவல்களை இணைத்து அவருக்கு எழுதிக் கொடுத்தேன். அதைப் பார்த்தவர் என்னை ஓ மிகவும் இதெல்லாம் எழுதுவீர்களா..? என்று கேட்டு வாங்க போங்க என்று பேசினார்; உடனே சுப்பிரமணியம் இவன் நல்ல பையன் தயவு செய்து இவனை வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கேட்டார்; அதற்கு பாக்யராஜ் என்னிடமே நிறைய பேர் இருக்கிறார்கள்; பிறகு எப்படி இவனை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும் என்று மறுத்துவிட்டார். ஆனால் நான் அவரிடம் இருந்த உதவி இயக்குநர்களிடம் நல்ல நெருக்கமாக பழகிவிட்டேன்.

விடியும் வரை ஷூட்டிங்கின் 10 ஆவது நாள்... உதவி இயக்குனர்கள் என்னை அழைத்து நாளை ‘மௌன கீதங்கள்’ படத்தினுடைய ஷூட்டிங் அடையாரில் நடக்கிறது அதற்கு நீ வந்து விடு என்றார்கள்.. நான் உடனே டைரக்டர் கேட்டால் என்ன சொல்வது என்று கேட்டேன். அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் வா என்றார்கள். நானும் சென்று விட்டேன் என்னை கிளாப் போர்டு அடிக்கச் சொன்னார்கள்; என் நேரம் பார்த்து டைரக்டர் சார் பார்த்து திரும்பி இருந்தார்; நான் உடனே கிளாப் போர்டு அடித்து ஓடி விட்டேன்; குரல் புதிதாக இருக்கிறது என்று யூகித்த டைரக்டர் கட் என்று சொல்லிவிட்டு குரல் புதிதாக இருக்கிறது யார்..? என்று கேட்டார். அதன் பின்னர் ஒளிந்து இருந்த என்னை கண்டுபிடித்து உன்னை யார் இங்கு வரச் சொன்னது என்று கேட்டார்.. உடனே நான் நான் தந்தை இல்லாத பையன் சார் சினிமா தான் எனக்கு உயிர் தயவு செய்து என்னை வேலையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று காலை பிடித்து அழுது கெஞ்சினேன். பின்னர் அவர் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் என்னுடைய சினிமா வாழ்க்கை தொடங்கியது.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.