Chinna Thambi: ‘மென்டல் பையனுக்கு ஜமீன் வீட்டு பொண்ணு கேக்குதோ?.. விதவைக்கு நடந்த கொடூரம்!- சின்னத்தம்பி உருவான கதை!
Chinna Thambi: அவனுக்கு கடைக்குச் சென்று பொருட்களை சொல்லி வாங்கும் அளவிற்கெல்லாம் அறிவு கிடையாது. ஆனாலும், அந்த வீட்டு உரிமையாளர் அவரைத்தான் அனுப்புவார். - சின்னத்தம்பி உருவான கதை!
சின்னத்தம்பி திரைப்படம் உருவான கதையை பி.வாசு பிடி பிரைம் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
என்னை பாதித்த கேரக்டர்
அவர் பேசும் போது, “வாழ்க்கையில் நாம் நிறைய பேரை சந்திப்போம். ஆனால், சில கேரக்டர்கள் எங்களை போன்ற எழுத்தாளர்களை மிகவும் பாதித்து விடும். அந்த கேரக்டர் எங்கள் மனதிற்குள் ஊறிக்கொண்டே இருக்கும். நம்முடைய படைப்பில் அவரை எங்கேனும் பயன்படுத்த முடியுமா என்று நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம்.
அப்போது, நாங்கள் கோபாலபுரத்தில் வசித்து வந்தோம். அங்கு மனநலம் சரியில்லாத ஒரு சிறுவன், அங்குள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு கடைக்குச் சென்று பொருட்களை சொல்லி வாங்கும் அளவிற்கெல்லாம் அறிவு கிடையாது. ஆனாலும், அந்த வீட்டு உரிமையாளர் அவரைத்தான் அனுப்புவார்.
வாயில் ஹாரன்.. கையில் ஆசிலேட்டர்
அவன் எப்போதுமே அவனிடம் ஒரு வண்டி இருப்பது போல கற்பனையாக நினைத்துக்கொள்வான். நான் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது, வாயில் ஹாரன் அடித்துக்கொண்டே அவன் வருவான். எங்களை பார்த்ததும் இன்னும் அதிக சத்தமிட்டு ஹாரன் அடிப்பான். நாங்கள் வழி விடுவோம். அதன் பின்னர் இன்னும் வேகமாக ஓடுவான்.
ஒரு நாள் அவனை நாங்கள் வழிமறித்து எங்கே செல்கிறாய் என்று கேட்டோம். அதற்கு அவன் ‘விசக்கை’ என்றான். தொடர்ந்து அவனது பையில் கைவிட்டு பார்த்த போது, அதில் ஒரு சீட்டு இருந்தது. அந்த சீட்டில் ‘விக்ஸ்’ என்று எழுதி இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது விக்ஸைதான் அவன் விக்ஸ் என்று கூறினான் என்று…
அவனுடைய மேனரிசங்கள், நடை, உடை, பாவனை உள்ளிட்டவையெல்லாம் எனக்குள் அப்படியே பதிந்து விட்டது. இன்னொரு இடத்தில் ஜமீன் குடும்பம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. அந்த ஜமீன் குடும்பத்திற்கு அந்த ஊரில் அப்படி மரியாதை கொடுத்தார்கள். அந்த கிராமத்தினர் அந்த குடும்பத்தை கிட்டத்தட்ட தெய்வமாகவே பார்த்தார்கள்.
அவர்கள் கோயில் சென்றால், வெளியே யாருமே வராமல் இருந்தார்கள். இது இரண்டையும் நான் கனெக்ட் செய்ய வேண்டும் என்று நினைத்துதான், அந்த வீட்டில் ஒரு பெண் இருந்து, அதனை இந்த பையன் காதலித்தால், எப்படி இருக்கும் என்று யோசித்தேன். பேப்பரை எடுத்து எழுதினேன். ‘சின்னத்தம்பி’ உருவாகி விட்டது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்