Indian 2 Audio Launch: மறைமுகமாக சொல்லிய ரஜினி.. கமல் ஹாசனிடம் திட்டு வாங்கிய இயக்குநர் நெல்சன்!
Indian 2: இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் நெல்சன், ஷங்கர் உடன் நான் இருந்திருக்கிறேன். இந்தியன் 2 படத்தில் ஷங்கர் அடித்த பால் எவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது. ஏனென்றால் அந்தளவிற்கு படம் வெற்றியைப் பெறும் என கூறினார்.

Indian 2: நடிகர் கமல் ஹாசன் நடித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (ஜூன் 1) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். மேலும் கோலிவுட்டின் ட்ரெண்டான இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விழாவில் இயக்குநர் நெல்சன் பேசுகையில், “ இயக்குநர் ஷங்கர் உடன் நான் இருந்திருக்கிறேன். இந்தியன் 2 படத்தில் ஷங்கர் அடித்த பால் எவ்வளவு தூரம் போகும் என்று தெரியாது. ஏனென்றால் அந்தளவிற்கு படம் வெற்றியைப் பெறும்.
ரஜினிகாந்த் பாராட்டு
ஜெயிலர் படப்படிப்பில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கரை கடின உழைப்பாளி என்று சொல்லி கொண்டே இருப்பார். அவரை போல் நானும் ஆக வேண்டும் என அவர் மறைமுகமாக சொல்வதை தெரிந்து கொண்டேன். இவர் ஷங்கரை பாராட்டுகிறாரா அல்லது என்னை திட்டுகிறாரா என்றே ஒரு நிமிடம் புரியவில்லை.