Director Mysskin: கண்ணை ஆட்டிய பெண்.. துண்டாக தூக்கிய மிஷ்கின்.. பொறாமையின் உச்சத்திற்கு சென்ற பாலா - வணங்கான் ஷேரிங்ஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Mysskin: கண்ணை ஆட்டிய பெண்.. துண்டாக தூக்கிய மிஷ்கின்.. பொறாமையின் உச்சத்திற்கு சென்ற பாலா - வணங்கான் ஷேரிங்ஸ்!

Director Mysskin: கண்ணை ஆட்டிய பெண்.. துண்டாக தூக்கிய மிஷ்கின்.. பொறாமையின் உச்சத்திற்கு சென்ற பாலா - வணங்கான் ஷேரிங்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 04, 2023 04:13 PM IST

மிஷ்கின் குறித்து இயக்குநர் பாலா சிலாகித்து பேசி இருக்கிறார்.

இயக்குநர் பாலா பேட்டி!
இயக்குநர் பாலா பேட்டி!

அந்த திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த கைதட்டலைப் பார்த்து நான் அழுது கொண்டே இருந்தேன். இந்த உலகை அழகாக மாற்றிக் கொண்டிருக்கிற, சினிமாவை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிற பாலாவை அழைக்கிறேன் என்று பேசினார் இதனை எடுத்து பாலா மேடை ஏறினார்.

பாலா பேசும் பொழுது, “மிஷ்கின் இளையராஜா சாரை பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் இளையராஜா மிஷ்கின் பற்றி சொன்ன சம்பவத்தை நான் இங்கு பகிர வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது, மிஷ்கின் திரைப்படம் வெளியாகி இருக்கிறது என்பது குறித்து எல்லாம் எனக்கு தெரியாது. 

நான் என்னுடைய படத்தின் பாடல் பதிவிற்காக இளையராஜா விடம் சென்றிருந்தேன். அப்போது அங்கு ஒருவர் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்தார். உடனே இளையராஜா சாரிடம், யார் இவர் என்று கேட்டேன். 

அதற்கு இளையராஜா அவனை சாதாரணமாக எடை போட்டு விடாதே. அவன் அறிவாளி என்று சொன்னார். அவனிடம் நெருங்கி பழகிய பின்னர் தான் தெரிந்தது அவன் ஒரு டெவில் என்று.. டெவில் இன்னொரு டெவிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நான் இவனுடைய பெயரை என்னுடைய மொபைலில் ஓநாய் என்று தான் சேவ் செய்து வைத்திருக்கிறேன்.

தொடர்ந்து பேசிய மிஷ்கின் நான் வணங்கான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன் என்று சொன்னார். இந்த பெருமையை எனக்கு கொடுத்த பாலாவிற்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இதனை அடுத்து பேசிய பாலா, உதவி இயக்குனராக அல்ல இயக்குனராகவே அவன் வேலை பார்த்து இருக்கிறான் என்றார்.  

மேலும் பேசிய பாலா, “வணங்கானில் மிஷ்கின் ஒரு சீன் பண்ணான். அதை அவனையே கம்போஸ் செய்து கொள்ள சொன்னேன். அந்த சீனை எடுத்து முடித்த பிறகு என்னிடம் வந்து சீன்  ஓகே வா என்று கேட்டான். நான் ஓகே என்று சொல்லிவிட்டேன். ஆனால் இவன் என்னிடம் வந்து இல்லை ஒரு முறை பாருங்கள் என்று சொன்னான். 

உடனே  நான் மறுபடியும் பார்த்துவிட்டு நன்றாக தானே இருக்கிறது என்று சொன்னேன். அது வித்தியாசமான கம்போசிங்காகவும்  இருந்தது. அந்த சீனில் மொத்தம் 20 நடிகர்கள் இருந்தார்கள்.  அந்த சீனில் இவன் கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு கையைக் கட்டி, குனிந்து நிற்க வேண்டும் அவ்வளவுதான். 

நான் உடனே ஏன் இவன் இப்படி சொல்கிறான் என்று பார்க்கும் பொழுது, அதில் ஒரு பெண் மட்டும் கண்ணை சிறிதாக ஆட்டி இருக்கிறது. அது அவள் கேமராவை பார்ப்பது போல அமைந்திருந்தது. குனிந்து தான் நின்றான் எப்படி இதை கவனித்தான் என்று யோசித்த போது, அவன் குனிந்து கொண்டே மேலே கண்ணை விழித்துப் பார்த்திருக்கிறான். அப்படி ஒரு கூர்மையான ஆள் மிஷ்கின்.. இந்த சம்பவத்தை நினைத்து கிட்டத்தட்ட என்னால் ஒரு வாரம் எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. இவனுடன் நம்மை ஒப்பிடும் பொழுது நாம் ஒன்றுமே இல்லையே என்று  தோன்றியது. இவன் முன்னால் நான் ஒன்றுமே இல்லைதான்” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.