Suhasini: முதல் படத்திலேயே சுஹாசினியை வற்புறுத்திய மகேந்திரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Suhasini: முதல் படத்திலேயே சுஹாசினியை வற்புறுத்திய மகேந்திரன்

Suhasini: முதல் படத்திலேயே சுஹாசினியை வற்புறுத்திய மகேந்திரன்

Aarthi V HT Tamil
Jun 22, 2023 06:30 AM IST

இயக்குநர் மகேந்திரன், சுஹாசினியை எப்படி தன் முதல் படத்தில் நடிக்க வைத்தார் என்பது குறித்து பார்க்கலாம்.

மகேந்திரன், சுஹாசினி
மகேந்திரன், சுஹாசினி

இந்த படம் தொடங்குவது முன்பாக சுஹாசினி, துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்து உள்ளார். அவர் கடைசியாக ரஜினியின் ஜானி படத்தில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அந்த படத்தின் போது தான் சுஹாசினியை தன் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடிக்க வைக்கும் யோசனை மகேந்திரனுக்கு வந்தது. அவரின் இந்த முடிவை சுஹாசினி முதலில் ஏற்க மறுத்த நிலையில் அவரை சமாதானம் செய்து நடிக்க வைத்து இருக்கிறார், இயக்குநர் மகேந்திரன்.

இதை அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் கூறி இருக்கிறார், “ஒரு நான் மதியம். ஜானி ஷூட்டிங் சென்னையில் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. லைட்டிங் இடைவேளையில் நான் வெளியே வந்து உட்கார்ந்தேன்.

ஒளிப்பதிவாளருக்கு உதவியாக இருந்த சுஹாசினி, அங்கும் இங்கும் பரபரவென்று விளக்குகளை இடம் மாற்றி கொண்டு இருக்கிறது. பளிச் என்று என் மனசில் நானே சொடுக்கியது மாதிரி இருந்தது.

நெஞ்சத்தைக் கிள்ளாதே கதை எப்படி மும்பைக் கடற்கரையில் ஒரு பெண் ஓடுவதைப் பார்த்து உருவானதோ, அதே போன்று அந்த கதாபாத்திரத்துக்காக நான் தேடும் புதுமுகமும், இப்போது என் கண்முன்னே சுஹாசினியாக ஓடிக் கொண்டி இருக்கிஆர்.

என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள். இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரி நொடிப் பொழுதில் நடந்தது. அதுவும் என் கண் முன்பே நடந்தது.

எந்த கௌரிசங்கரிடம் முதன் முதலில் மும்பை ஹோட்டன்ஸ் வைத்து அந்தக் கதையைச் சொன்னேனோ அவரே இப்போதும். என் பக்கத்தில் இருக்கிறார்.

அவரிடம் சுஹாசினியை காட்டினேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். சுஹாசினியின் படபட பேச்சு, குறும்புத்தனம், ஆழமான பாசம், பரிவு எல்லாமே இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என தோன்றியது. 

உடனே சுஹாசினியிடம் சென்று, " நீ நடிக்க வேண்டும் சுஹாசின் என சொன்ன போது அவர் என்னை கையெடுத்து கும்பிட்டார். சார். என்னை விட்டுடுங்க சாமி, நான் எதிர்காலத்தில் பெரிய ஒளி பதிவாளராக வேண்டுமென ஆசைப்பட்டு நிற்கிறேன்" என்ற ஒரே போடாய்ப் போட்டுவிட்டார்

 இந்த ஒரே ஒரு படம்தான் சுஹாசின் ஷூட்டிங் நெருங்கிவிட்டது என்னை காப்பாற்ற வேண்டும் என சொன்னேன்.  ஒரேடியாக மறுத்து விட்டது.  இறுதியில் அவரை சமாதனம் செய்து நான் தான் வற்புறுத்தி நடிக்க வைத்தேன். இந்த ஒரே படம் தான் அதுவும் என்னால் நடிக்க முடியவில்லை என்றால், பாதியிலேம் வீட்டுக்கு ஓடியாந்திருவேன்" என்ற உத்தரவாதத்தோடு நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். அப்படி தான் இந்த படம் ஆரம்பமானது” என்றார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.