Lokesh kanagaraj: ‘இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே.. லோகேஷின் அடுத்த அவதாரம்..வந்தாச்சு அறிக்கை!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநராக அறிமுகமான அவர் ‘கைதி’ ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார்.
அதனை தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப்படம் வசூலில் பெரிய உயரத்தை அடைந்த போதும், கடுமையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப்போகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் லோகேஷ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ 5 படங்களை டைரக்ட் செய்திருக்கும் நான், அடுத்ததாக ‘G squad’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். முதற்கட்டமாக என்னுடைய நண்பர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரின் ஐடியாக்களை படமாக எடுக்க இருக்கிறேன். உங்களுடைய ஆதரவை வழக்கம் போல தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்