Director Lingusamy: ‘ட்ரஸ் மாத்த ரொம்ப தூரம் போணும்னு தமன்னா.. ‘பையா 2’ வேணுமான்னு கேக்குறார் கார்த்தி’ -லிங்குசாமி!-director lingusamy latest speech about karthi tamanna paiya movie - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Lingusamy: ‘ட்ரஸ் மாத்த ரொம்ப தூரம் போணும்னு தமன்னா.. ‘பையா 2’ வேணுமான்னு கேக்குறார் கார்த்தி’ -லிங்குசாமி!

Director Lingusamy: ‘ட்ரஸ் மாத்த ரொம்ப தூரம் போணும்னு தமன்னா.. ‘பையா 2’ வேணுமான்னு கேக்குறார் கார்த்தி’ -லிங்குசாமி!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 03, 2024 04:52 PM IST

“அந்த பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது, அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால், கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால், இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்கச் சொல்லி” - லிங்குசாமி!

இயக்குநர் லிங்கு சாமி!
இயக்குநர் லிங்கு சாமி!

இந்தநிலையில் பையா ரீ ரிலீஸ் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குநர் N. லிங்குசாமி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் N. லிங்குசாமி கூறுகையில், “18 நாட்களில் ‘பையா’ திரைப்படத்தின் கதையை தயார் செய்தேன். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் போய், இந்த கதையை கூறினேன். முதல் காட்சியில் சிரிக்க ஆரம்பித்தவர், முழு கதையையும் கேட்டு கலகலகவென்று சிரித்தபடி, இதை நாம் செய்வோம் என்று கூறினார். இந்த கதை உருவாகும்போதே ‘பையா’ என்கிற டைட்டிலும் கிடைத்து விட்டது.

பையா டைட்டில் யோசிக்கும்போது, ஏற்கனவே கார்த்திக்கு பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் என கொஞ்சம் பெரிய பெரிய வார்த்தைகளில் டைட்டில் இருக்கிறது. இது கொஞ்சம் சிறிதாக, கூலாக இருக்க வேண்டும் என நினைத்தோம். இது போன்ற விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த டைட்டிலை கூறினேன். என்ன அர்த்தம் என்று கேட்டார்கள்.. எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி பையாவுக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது.

படம் முதல் முறை ரிலீஸ் ஆகும்போது அவ்வளவு சந்தேகங்கள். டென்ஷன் இருந்தது. இந்த முறை படம் பார்த்தபோது ரொம்பவே ரிலாக்ஸாக இருந்தது. ஒவ்வொரு பட ரிலீஸும், ரீ ரிலீஸ் போல இருந்து விட்டால் எப்படி இருக்கும் என நினைத்தேன்.

பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதிலும் “அடடா மழை டா’ பாடலுக்கு ஒன்ஸ்மோர் போட சொன்னார்கள். கடைசியில் என்ட் கார்டில் போடப்படும் பாடலுக்கு கூட ஒன்ஸ்மோர் கேட்டு, பல பேர் அங்கேயே நின்று விட்டார்கள். தமன்னாவின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கை தட்டுகிறார்கள். 

அந்த பாடல் காட்சியை சாலக்குடியில் படமாக்கிய போது, அடுத்தடுத்து உடைகளை மாற்ற வேண்டும் என்றால், கொஞ்சம் தூரத்தில் இருக்கும் கேரவனுக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு நேரமாகும் என்பதால், இரண்டு பெண்களை அழைத்து சேலையை மறைப்பாக பிடிக்கச் சொல்லி, எந்த தயக்கமும் இன்றி உடனடியாக உடை மாற்றிக் கொண்டு வந்து நடித்தார் தமன்னா

இந்த படத்திற்கு இந்த இரண்டு நடிகர்களின் ஒத்துழைப்பும் ரொம்பவே முக்கியம். பையா படத்தில் தமன்னா நடிக்கும் போது அவருக்கு 18 வயது தான்.. அவருக்கு முதல் பெரிய ஹிட் பையா தான். பருத்திவீரன் பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார்.

இந்த படத்திற்காக மூன்று கார்களை வாங்கினோம். ஒரு பெரிய ட்ரக் ஒன்றை மும்பையில் இருந்து வரவழைத்து கார்களை எங்கள் வசதிக்கேற்ற மாதிரி பிரித்து, அதில் காட்சிகளை படமாக்கினோம். படம் வெளியான பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் என்னிடம் ஒருமுறை பேசும்போது, இது போன்ற டிராவல் படங்களில் பல காட்சிகளை ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு ஷாட் கூட நீ ஏமாற்றி எடுக்கவில்லை என்று கூறினார். அவ்வளவு பெரிய இயக்குநர் அப்படி கூறியபோது சந்தோசமாக இருந்தது. அந்த அளவுக்கு டெக்னிக்கலாக இந்த படத்தை எடுத்தோம்.

பையா 2 படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன். 14 வருடங்கள் ஆகிவிட்டதே இப்போதுதான் தெரிகிறது. ஆனால் இந்த 14 வருடங்களில் கார்த்தியின் நடிப்பில், தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதாலும், ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டார் என்பதாலும் மீண்டும் பையா கதாபாத்திரத்தை திரும்பி பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். அதனால் இதற்கு பதிலாக வேறு ஏதாவது பண்ணலாமா என்று கேட்டுள்ளார்.

பையா 2 படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால் பையா 2விலும் கார் இருக்கும்.. ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று கூறினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.