ஆம்பளையா இருந்தா நேர்ல வாடா.. டிடிஎஃப் வாசனுக்கு சவால் விடும் செல்அம்.. அலற வைத்த அஜீஸ்! - நடந்தது என்ன?
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை நீக்கிய செல் அம்மை வாசனின் நண்பர் அஜீஸ் கடுமையாக சாடியிருக்கிறார்.

தன்னை ‘மஞ்சள் வீரன்’திரைப்படத்தில் இருந்து தூக்கியது துரோகம் என்று டிடிஎஃப் வாசன் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதற்கு மஞ்சள் வீரன் இயக்குநர் செல்அம் டிடிஎஃப் வாசன் ஊர் சுற்றிக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தர மறுத்த காரணத்தினால்தான், அவரை படத்தில் இருந்து தூக்கினோம். அவர் தற்போது என்னைப் பற்றி வீடியோவில் பேசி தற்போது 3 லட்சம் வரைக்கும் அவர் சம்பாதித்து இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். இந்த நிலையில், செல் அம் தற்போது எஸ். எஸ். மியூசிக் சேன்லுக்கு பேட்டிக்கொடுத்து இருக்கிறார்.
ஆம்பளையா இருந்தால்
இது குறித்து அவர் பேசும் போது, “டிடிஎஃப் வாசன், சரியான ஆம்பளையாக இருந்தால், இங்கிருக்கும் எல்லா பத்திரிக்கை முன்னரும் வரவேண்டும். என்னுடன் அவர் நேருக்கு நேராக அமர்ந்து பேட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது உண்மை தெரியும். போனில் பேசுவது, பின்னால் இருந்து ஒளிந்து கொண்டு பேசுவது, பாம்பேவில் இருந்து கொண்டு பேசுவதெல்லாம் என்னிடம் நடக்காது. தைரியம் இருந்தால், நேரில் வா என்றைக்கு தேதி என்று சொல். அன்றைய தேதியில் நான் உன்னை நேருக்கு நேராக சந்திக்கிறேன்” என்றார்.