HBD BR Panthulu: சிவாஜியின் வெற்றி இயக்குனர்.. எம்ஜிஆர் வைத்த கூட்டணி.. இயக்குனர் பி.ஆர்.பந்துலு பிறந்தநாள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Br Panthulu: சிவாஜியின் வெற்றி இயக்குனர்.. எம்ஜிஆர் வைத்த கூட்டணி.. இயக்குனர் பி.ஆர்.பந்துலு பிறந்தநாள்

HBD BR Panthulu: சிவாஜியின் வெற்றி இயக்குனர்.. எம்ஜிஆர் வைத்த கூட்டணி.. இயக்குனர் பி.ஆர்.பந்துலு பிறந்தநாள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 26, 2024 06:00 AM IST

HBD BR Panthulu: நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பல்வேறு வேடங்களில் பந்துலு அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். காரணமாக இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தான் நடிப்பது மற்றும் தயாரிப்பது குறித்து சிவாஜி கணேசனிடம் பந்துலு ஆலோசனை செய்தார்.

சிவாஜியின் வெற்றி இயக்குனர்.. எம்ஜிஆர் வைத்த கூட்டணி.. இயக்குனர் பி.ஆர்.பந்துலு பிறந்தநாள்
சிவாஜியின் வெற்றி இயக்குனர்.. எம்ஜிஆர் வைத்த கூட்டணி.. இயக்குனர் பி.ஆர்.பந்துலு பிறந்தநாள்

சிறுவயது முதலே சினிமாவின் மீது இவருக்கு அதிக ஆர்வம் இருந்து வந்துள்ளது. பிறப்பிலேயே வசதியான குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் இவருக்கு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

சினிமாவில் நோக்கி படையெடுக்க தொடங்கினார். முதல் முதலாக ராஜபக்தி என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் அடுத்தடுத்து நடித்து வந்த திரைப்படங்களில் எல்லாம் சிறிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் முழு படத்தையும் முழுமையாக கவனித்து அனைத்து வேலைகளையும் ஈர்த்துக்கொண்டார்.

ஆரம்ப காலகட்டத்திலேயே நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் பல்வேறு வேடங்களில் பந்துலு அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். காரணமாக இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு தான் நடிப்பது மற்றும் தயாரிப்பது குறித்து சிவாஜி கணேசனிடம் பந்துலு ஆலோசனை செய்தார்.

சிவாஜி கூட்டணி

நான் திரைப்படங்கள் இயக்கினால் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என சிவாஜி கணேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவரும் ஒப்புக்கொண்டார் பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் பந்துலு சொந்தப் படங்களை தயாரிக்க தொடங்கினார்.

தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா என்ற இரண்டு திரைப்படங்களில் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தை சிவாஜி கணேசனை வைத்து முதல் கலர் திரைப்படத்தை கொடுத்தார். சிவாஜி கணேசனின் மிகவும் ரசனை மிகுந்த கதாபாத்திரமாக பந்துலு இதில் இயக்கினார்.

அடுத்த கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் மூலம் சிவாஜியை மிகப்பெரிய நாயகனாக மாற்றினார் பந்துலு. பலே பாண்டியா என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக சிவாஜியின் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். மூன்று விதமாக சிவாஜி கணேசனை எப்படி இவர் வைத்து இயக்கினார் என்பது இன்றுவரை பலருக்கும் ஆச்சரியமாக இருந்து வருகிறது.

கர்ணன் திரைப்படத்தில் இயக்கி பெரிய வெற்றியை கொடுத்தார். சிவாஜி கணேசனின் எந்தெந்த கோணத்தில் ரசித்தாரோ அப்படியெல்லாம் வைத்து இவர் படம் எடுத்தார். சிவாஜியோடு அந்த அளவிற்கு இவர் நெருக்கமாக இணைந்து விட்டார்.

சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டார். ஆனால் இயக்குனர் ஏ.பி நாகராஜன் சொன்ன நவராத்திரி திரைப்படத்தின் கதை சிவாஜிக்கும் மிகவும் பிடித்து விட்டது.

இதன் காரணமாக சிவாஜி கணேசனுக்கும், பந்துலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த எம்ஜிஆர் பந்துலுவை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்தக் கதைதான் பின்னாளில் கலர் படமாக எடுக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன். இந்தத் திரைப்படத்தில் முதன் முதலாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்தார்கள்.

எம்ஜிஆர் சேர்ந்தார்

அதற்குப் பிறகு இருவரும் இணைந்து நாடோடி, தேடி வந்த மாப்பிள்ளை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தனர். எம்ஜிஆர் நடித்து வெளியான கடைசி திரைப்படமான மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படத்தையும் இவர்தான் இயக்கினார். பாதி திரைப்படத்திலேயே பந்துலு உயிரிழந்தார். மீதி திரைப்படத்தை எம்ஜிஆர் இயக்கி வெளியிட்டார்.

தமிழ் மட்டுமல்லாது கன்னட மொழியிலும் பல்வேறு விதமான வெற்றி திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். கன்னட சினிமா இவருக்கென மிகப் பெரிய விழாவை எடுத்துக் கொண்டாடியது. அப்படிப்பட்ட ஆகச் சிறந்த கலைஞனின் 114 வது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மிகப்பெரிய பயணத்தை சினிமாவில் கண்ட இந்த கலைஞனுக்கு என்றும் மறைவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.