கவுண்டமணியா வேண்டாம்.. ஓபனாக உருவகேலி செய்த பாரதிராஜா
கவுண்டமணியை முன்பு பாரதிராஜா உருவகேலி செய்த சம்பவம் தெரியவந்து உள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்றால் நாகேஷ் தான் காரணம் . அதன் பிறகு கவுண்டமணியும், செந்திலும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். குறிப்பாக கவுண்டமணியின் நகைச்சுவை ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.
அதில் கவுண்டமணியை ஏளனமாக நிராகரித்துள்ளனர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் ரஜினியின் வலது கையாக நடித்தவர் கவுண்டமணி.
16 வயதினிலே படம் மாபெரும் வெற்றி பெற்ற போது படத்தில் நடித்த அத்தனை பிரபலங்களுக்கும் வாய்ப்புகள் குவிந்தன. கவுண்டமணிக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதற்குப் பிறகு, பாரதிராஜா தனது இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலின் படப்பிடிப்பைத் தொடங்கினார். அப்போது, இயக்குனரும் , நடிகருமான பாக்யராஜ் இவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
அப்போது கவுண்டமணியை ஒரு வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்று பாக்யராஜ் கூறி இருக்கிறார். ஆனால் பாரதிராஜா முதல் படத்தில் நடித்த பிறகு அவரை வேண்டாம் என்று கூறிவிட்டார். அவரது வழுக்கைத் தலை மற்றும் முகம் அவருக்குப் பிடிக்காது.
அதன்பிறகு அந்த வேடத்தில் டெல்லி கணேஷ் நடிக்க வைக்க பேச்சப்பட்டு வந்தது . ஆனால் பாக்யராஜ் எப்படியோ பாரதிராஜாவிடம் பேசி கவுண்டமணியை நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அந்த படத்தில் கவுண்டமணி கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜா படத்திலும் கவுண்டமணி நடித்துள்ளார்.மேலும் பாரதிராஜா தனது படங்களில் கவுண்டமணிக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்தார். அதுமட்டுமின்றி தனது முதல் படத்திலும் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் பாக்யராஜ் . இப்படி கவுண்டமணி புகழ் உயர முக்கிய காரணமாக இருந்தவர் பாக்யராஜ் .
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்