Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ் தேதி இதுவா..எகிறும் எதிர்பார்ப்பு!
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் கவுதம் மேனன் கூட்டணி போட்டு இருக்கும் திரைப்படம், துருவ நட்சத்திரம். ஏழு வருட படப்பிடிப்புக்கு பிறகு மே 19 ஆம் தேதி வெளியிட இயக்குநர் கவுதம் மேனன் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
016ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துருவ நட்சத்திரம்படப்பிடிப்பு தொடங்கியது. முதலில் இந்த படத்தை சூர்யாவை வைத்து இயக்க கவுதம் மேனன் விரும்பினார். ஆனால் தேதிகள் அமையாததால் விக்ரமை வைத்து இந்த பெரிய பட்ஜெட் படத்தை தொடங்கினார்கள். படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த ஐந்து வருடங்களாக படத்தின் வெளியீடு தள்ளிப்போய் வருகிறது. தற்போது ரிலீஸ் தொடர்பான பிரச்னைகளை கவுதம் மேனன் தீர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ நட்சத்திரம், விக்ரம் ஜான் என்ற அண்டர்கவர் ஏஜென்டாக நடித்து இருக்கிறார்.
ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பெல்லி சூப்புலு வெற்றிக்குப் பிறகு ரித்து வர்மா ஒப்புக்கொண்ட படம் இது. இப்படம் அமெரிக்கா, ஸ்லோவேனியா, பல்கேரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்