13 Years of Vengai: தனுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல்! சிவகங்கை சீமையில் உருவான வேங்கை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  13 Years Of Vengai: தனுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல்! சிவகங்கை சீமையில் உருவான வேங்கை

13 Years of Vengai: தனுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல்! சிவகங்கை சீமையில் உருவான வேங்கை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 08, 2024 07:30 AM IST

னுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல், சிவகங்கை சீமை பின்னணியில் உருவான படமாக வேங்கை உள்ளது. சிங்கம் படம் முதல் பாகத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியான வேங்கை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தனுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல், சிவகங்கை சீமையில் உருவான வேங்கை
தனுஷ் - ஹரி கூட்டணியின் மாஸ் மசாலா படையல், சிவகங்கை சீமையில் உருவான வேங்கை

மாப்பிள்ளை படத்துக்கு கிடைத்த வரவேற்பால் அதே பாணியிலான கமர்ஷியல் கதை தேர்வு செய்து இயக்குநர் ஹரியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தார்.

தனது பட ஹீரோக்களை லுக் முதல் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் என அனைத்திலும் மாஸாக காட்டும் இயக்குநர் ஹரி, இந்த படத்தில் தனுஷையும் துருதுருப்பான கதாபாத்திரத்தில் காட்டியிருப்பார்.

காதல் கலந்த ஆக்‌ஷன் படம்

தமிழ்நாட்டில் இருக்கும் ஏதேனும் ஒரு ஊர் அல்லது வட்டாரத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன், விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருப்பது இயக்குநர் ஹரி படங்களின் ஸ்பெஷலிட்டி. அந்த வகையில் தனுஷின் வேங்கை திரைப்படம் சிவகங்கை பகுதியை சுற்றி நடக்கும் கதையாக இருக்கும்.

ஊர் பெரியவராக இருக்கும் ராஜ்கிரண், அந்த பகுதியை ஊழல்வாதி அமைச்சராக இருக்கும் பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு இடையிலான மோதல் இருக்க, கல்லூரி பெண்ணாக வரும் தமன்னாவை காதலிக்கிறார்.

அரசியல்வாதிக்கு எதிரான மோதலில் தனது தந்தையை தனுஷ் எப்படி காப்பாற்றுகிறார், காதலி தமன்னாவை எப்படி கரம் பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்துக்கு முதலில் அருவா என தலைப்பு வைக்கப்பட்ட நிலையில், பின்னர் வேங்கை என மாற்றப்பட்டது. 

விறுவிறுப்பான திரைக்கதை

ஹரி படத்துக்கே உண்டான மாஸ் காட்சிகள், காதல், குடும்ப செண்டிமென்ட், காமெடி என அனைத்து மசாலாக்களையும் தூவி விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

ஒரு மாஸ் ஹீரோ செய்ய வேண்டிய வேலையை இந்த படத்தில் தனுஷ் கணகச்சிதமாக செய்து ரசிக்க வைத்திருப்பார். அதேபோல் ஹீரோவை மீது காதலிப்பது போல் நடித்து தனது பகையை தீர்க்க முயற்சிப்பதும், பின்னர் உண்மை அறிந்து மீண்டும் காதலில் விழுவதும் என தனது கதாபாத்திரத்துக்கு ஏற்பட நடிப்பை தமன்னா வெளிப்படுத்தியிருப்பார்.

ஊழல் அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ் பெரிய மீசையுடன் மிரட்டுவார். அதேபோல் ஊர் பெரியவராக வழக்கம் போல் சாந்தமான நடிப்பை காட்டியிருப்பார் ராஜ்கிரண். ஊர்வசி, கஞ்சா கருப்பு, பறவை முனியம்மா, சார்லி என ஹரி படங்களில் வழக்கமாக தோன்றும் நடிகர்கள் பலரும் தங்களது வேலையை சிறப்பாக செய்திருப்பார்கள்.

பாடல்கள், பிஜிஎம்மில் மிரட்டிய தேவி ஸ்ரீபிரசாத்

விவேகா பாடல்கள் வரிகளில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. கமர்ஷியல் படத்துக்கு ஏற்ப இதன் காட்சியமைப்புகளும் ரசிக்கும் விதமாக இருந்தது. இயக்குநர் ஹரி எழுதிய என்ன சொல்ல போற என்ற மெலடி அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட பாடலாக அமைந்தது.

படத்தின் விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ப தேவி ஸ்ரீபிரசாத் பிஜிஎம்மும் மிரட்டலாகவே அமைந்திருந்தன.

கலவை விமர்சனம்

சூர்யாவின் சிங்கம் சீரிஸ் படங்களின் முதல் பகுதியான சிங்கம் படத்துக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் சிங்கம் படத்தில் இருந்த மாஸ் தருணங்கள் இதில் மிஸ் ஆவதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும், வழக்கமான ஹரி படங்களில் இருக்கும் அனைத்து அம்சங்களும் ரசிக்கும் விதமாக இருப்பதாக கூறப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரியான வசூலையும் ஈட்டியது. தனுஷின் மாஸ் மசாலா படங்களில் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்து வரும் வேங்கை படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.