Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?-dhanush starrer and directorial raayan movie ott release date officially announced - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 17, 2024 05:29 PM IST

ஆக்ஸ்ட் மாதத்துக்கான ஓடிடி வெளியீட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராயன் திரைப்படத்தின் ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் ஆகிறது. ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியிருக்கும் படத்தை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ்
Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ்

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் வெளியாகி, ஓடிடி ரிலீஸுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக தனுஷின் ராயன் அமைந்தருந்தது. தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.

ராயன் ஓடிடி ரிலீஸ் தேதி

தனுஷ் நடிப்பில் திரையரங்குகளில் தொடர்ந்து நான்காவது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது ராயன் திரைப்படம். இதையடுத்து படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி படமானது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 23 முதல் ஸ்டிரீமிங் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், அந்த நிறுவனத்தின் சன் நெக்ட் ஓடிடி தளத்திலும் படம் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

வரிசை கட்டும் தனுஷின் புதிய படங்கள்

தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

அத்துடன், கேப்டன் மில்லர் படத்துக்கு பின்னர் அருண் மாதேஸ்வரனுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கும் தனுஷ், இசைஞானி இளையராஜாவின் பையோபிக்கில் இளையராஜாவாக நடித்து வருகிறார்.

இது தவிர மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸில் புதிய படமாக அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்திலும் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதில் இளம் நடிகர், நடிகைகளான பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், ரபயா கத்தூன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தனித்துவ சாதனை

இதையடுத்து படம் வெளியாக மூன்று வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை ரூ. 150 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது

இதற்கிடையே சென்சாரில் ஏ சர்டிபிக்கேட் பெற்று ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய முதல் படம் என வசூலில் தனித்துவ சாதனையை ராயன் படம் பெற்றுள்ளது. படத்தின் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் விதமாக ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் குடும்ப படமாக இல்லாதபோதிலும் வசூலையும் படம் அள்ளியுள்ளது.

ராயன் படத்துக்கு அங்கீகாரம்

திரையிலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃபி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தனுஷின் ராயன் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.