Yaaradi Nee Mohini: தனுஷின் ப்ளாக் பஸ்டர்; யாரடி நீ மோகினி 15 வருடங்கள் நிறைவு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yaaradi Nee Mohini: தனுஷின் ப்ளாக் பஸ்டர்; யாரடி நீ மோகினி 15 வருடங்கள் நிறைவு

Yaaradi Nee Mohini: தனுஷின் ப்ளாக் பஸ்டர்; யாரடி நீ மோகினி 15 வருடங்கள் நிறைவு

Kalyani Pandiyan S HT Tamil
Apr 04, 2023 01:24 PM IST

யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் கழிந்திருக்கின்றன

யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி (sun nxt)

படம் சூப்பர் ஹிட் அடிக்க, அதனை தமிழில் செல்வாவின் உதவி இயக்குநரான மித்ரன் ‘யாரடி நீ மோகினி’ என்ற பெயரில் படமாக்கினார். படம் ரீமேக்தான் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே செல்வா சாரினுடையது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். 

வேலை கிடைக்காத இளைஞனான தனுஷ் விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை கடத்திக்கொண்டிருப்பார். அதை குத்தி காட்டி,குத்தி காட்டி மானத்தை வாங்குவார் அவரது அப்பா ரகுவரன். அந்த சமயத்தில் நயன் தாராவை தனுஷ் பார்க்க, அவர் மீது காதல் கொள்வார் தொடர்ந்து நயன் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதை அறிந்த தனுஷ், விடாப்பிடியாக படித்து, அந்த கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து அவரை காதலிப்பார்.

ஒரு கட்டத்தில் நயன் காதலை மறுக்க, சொந்து போவார் தனுஷ். இதனிடையே அப்பாவும் இறந்து விட, சோகமயமாக மாறிய தனுஷின் வாழ்க்கையை கொஞ்ச மாற்ற நண்பரான கார்த்திக் குமார் தன்னுடைய கல்யாணத்திற்கு அவரை அழைத்துச் செல்வார். அங்குதான் ட்விஸ்ட்.. காரணம் அங்கு மணப்பெண்ணே நயன்தாராதா. அதன் பின்னர் தனுஷின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் கதை!

வழக்கம் போல படத்தின் ஆகப்பெரும் பலமாய் இருந்தது தனுஷின் நடிப்பு. படத்தில் எமோஷன் காட்சிகளை விட காமெடி சம்பந்தமான காட்சிகளில் இந்த படத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்திருப்பார் தனுஷ். குறிப்பாக அப்பாவுடன் சண்டை போடும் காட்சிகள், கருணாஸ் உடனான காமெடி காட்சிகள்,  கிராமத்தில் பாட்டியுடனான காமெடிகள், சரண்யா உடனான காமெடிகள் என அனைத்துமே இன்றும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன. 

அதே போலத்தான் படத்தின் எமோஷனும். அப்பாவாக ரகுவரன், மகனாக தனுஷ்.. அவ்வளவு கனகச்சிதமாக அந்த வேடங்களில் இருவருமே பொருந்தி இருப்பர். காமெடி, எமோஷன், நடிப்பதற்கான ஸ்பேஸ் என அனைத்தையும் நயனுக்கு இந்த படம் வழங்கியது. யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை 100 நாட்கள் தாண்டி ஓட வைப்பதற்கு அச்சாணியாக அமைந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.