Dhanush Ilayaraja:‘ஒந்துணைக்கு நான்..’ ‘எப்போதுமே ஐயா’ கைகூப்பி வணங்கிய தனுஷ்!
விடுதலை திரைப்படத்தில் இருந்து வெளியாக உள்ள ‘ஒன்னோட நடந்தா’ பாடலின் இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அண்மையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் படத்தின் முதல் பாடலான ‘ஒன்னோட நடந்தா’ பாடல் நாளை (08-02-2023) காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது; அதுமட்டுமல்ல, இந்தப்பாடலை தனுஷ் பாடியிருப்பதாகவும் கூறி, இளையராஜா அந்தப்பாடலை தனுஷூக்கு சொல்லி கொடுக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது.
அதனைத்தொடர்ந்து தற்போது ஒரு வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் இளையராஜா, ஒந்துணைக்கு நான் தான் என சொல்ல.. தனுஷ் நெகிழ்ந்து ஆம் எப்போதுமே என்று இளையராஜவை கைகூப்பில் வணங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ‘வானம் பொழியாமா’ என்ற மெலடி பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது இளையராஜா இசையில் முதல் முறையாக தனுஷ் பாடியுள்ளார்.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், ராஜிவ் மேனன், பிரகாஷ்ராஜ், கிஷோர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிறைவு பெற்றது. படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாபிக்ஸ்