Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது..தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல்..! ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்-dhanush and nithya menen starrer thiruchitrambalam completed 2 years of its release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது..தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல்..! ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்

Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது..தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல்..! ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 18, 2024 07:20 AM IST

இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய படம் மட்டுமல்லாமல், படம் வெளியான காலகட்டத்தில் தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்ற ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர் என்ற பெருமையும் திருச்சிற்றம்பலம் படம் பெற்றது

Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது, தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல், ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்
Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது, தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல், ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்

முதல் ப்ரேமில் இருந்து கடைசி வரை எந்தவொரு ஒரு இடத்திலும் சலிப்பு தட்டாமல் படம் பார்ப்பவர்கள் ரசிக்க வைத்த சமீப கால படங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

தனுஷ், நித்யாமேனன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர்தான் கதையின் பிரதான மாந்தர்கள். படமும் இவர்களை சுற்றிதான் செல்லும்.

ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர், ரேவதி கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றினாலும் படத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய கேரக்டர்களாக வந்து போவார்கள்.

முனிஸ்காந்த், ஆனந்தராஜ், ஜான் மகேந்திரன், அரந்தாங்கி நிஷா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

நட்பில் தொடங்கி காதலில் முடியும் உறவு

தனுஷ் - நித்யா மேனன் ஆகியோர் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். தனுஷின் அம்மா ரேவதி விபத்தில் இருந்து போக அதற்கு தனது தந்தை பிரகாஷ் ராஜ் அலட்சியம் காரணம் என அவருடன் பேசாமலேயே ஒரே வீட்டில் வசித்து வருகிறார். தனுஷ், பிரகாஷ் ராஜுடன் அவரது தாத்தா பாரதிராஜாவும் வசித்து வருகிறார்.

தனுஷ் - நித்யா மேனன், தனுஷ் - பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இடையிலாக உறவு பாலமாகவும் இருந்து வருகிறார் பாரதிராஜா.

முதலில் ராஷி கண்ணாவை காதலித்து அவர் மறுப்பது, பின்னர் ஊர் திருவிழாவில் ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து உருகுவது அவரும் விலகுவது என காதல் தோல்வியில் சிக்குகிறார் தனுஷ்.

இந்த சூழ்நிலையில் தாத்தா பாரதி ராஜாவின் அட்வைஸுக்கு பின் தோழியான நித்யா மேனனிடம் காதலை வெளிப்படுத்திகிறார். இந்த காதல் தனுஷுக்கு நிறைவேறியதா? தனது தந்தை பிரகாஷுடன் பேசினாரா? என்பத நகைச்சுவை மற்றும் உணர்ச்சி மிக்க எமோஷனல் காட்சிகளுடன் கூடிய திரைக்கதையில் எதார்த்தம் மாறாமல் சொல்லியிருப்பார்கள்.

அற்புத நடிப்பால் அசத்தல்

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான தனுஷ் , நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் கதைக்கு தேவையான நடிப்பை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்தி ரசிக்க வைத்தனர். கோபம், இயலாமை, பிரதவிப்பு என பல்வேறு உணர்ச்சிகளை காட்சிக்கு ஏற்ப வெளிக்காட்டி படத்தின் கதையோட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

அதிலும் பாரதிராஜா மகன், பேரன் என இரு தலைமுறைகளையும் கையாளும் கதாபாத்திரத்தில் தெளிவான முதிர்ச்சி தன்மையை வெளிப்படுத்தியிருப்பார்.

அனிருத் இசையில் ரீல்ஸ்களாக மாறிய பாடல்கள்

தனுஷ் பாடல் வரிகள் எழுத அனிருத் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான. மேகம் கருக்காதா என்ற பாடலை படமாக்கிய விதம் பலரையும் வெகுவாக கவர்ந்ததோடு, அதன் நடனத்தை அப்படியே ரீல்ஸ் விடியோவாக உருவாக்கி ஷேர் செய்தும் ட்ரெண்டாக்கினர். தாய் கிழவி என்ற குத்து பாடல் வீட்டில் நடக்கும் விஷேசங்களில் தவறாமல் இடம்பெறும் பாடலாக மாறியுள்ளது.

தேசிய விருதுகள்

2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை, மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டம் மற்றும் சதீஷ் கிருஷணனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இந்த படம் விமர்சக ரீதியாக பாரட்டுகளை பெற்று, ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்ததுடன் ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியது. அத்துடன் 2022ஆம் ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் மாறியது. தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூலை ஈட்டிய ஃபீல் குட் பேமிலி என்டர்டெய்னராக இருக்கும் திருச்சிற்றம்பலம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.