Devara Movie Review: ‘அதே கிரைண்டர்; அதே மாவு; கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Devara Movie Review: ‘அதே கிரைண்டர்; அதே மாவு; கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!

Devara Movie Review: ‘அதே கிரைண்டர்; அதே மாவு; கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!

HT Tamil Desk HT Tamil
Sep 27, 2024 12:48 PM IST

Devara Movie Review: கதையை விட ஹீரோ இமேஜ், கூஸ் பம்ப்ஸ் மொமண்ட்ஸ், ஹீரோயிசம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து படம் எடுக்கிறார்கள். இது பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கான சூத்திரமாகவே மாறிவிட்டது. அந்த ட்ரெண்டை இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார் இயக்குநர் கொரட்டாலா சிவா -

Devara Movie Review: ‘அதே கிரைண்டர்.. அதே மாவு.. கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!
Devara Movie Review: ‘அதே கிரைண்டர்.. அதே மாவு.. கொட்டு வைத்த கொரட்டல; என்.டி.ஆருக்கு எண்டு கார்டா? - தேவாரா விமர்சனம்!

‘தேவாரா’ கதை

‘தேவாரா’ (என்டிஆர்), அவரது நண்பர் ராயப்பா (ஸ்ரீகாந்த்), மற்றொரு கிராமத்து பெரியவர் பைரா (சைஃப் அலி கான்) மற்றும் அவர்களது கூட்டாளிகள் (கலையரசன், ஷைன் டாம் சாக்கோ) முருகா (முரளி ஷர்மா)விடம் வேலை செய்கிறார்கள். இவர்கள் கடற்படை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி, சட்டவிரோத ஆயுதங்களை கரைக்கு கடத்தி வருகின்றனர்.

தேவாரா
தேவாரா

ஒரு கட்டத்தில், சட்டவிரோத ஆயுதங்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்ந்த தேவரா, முருகனிடம் வேலை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.அத்தோடு அவர் நிற்கவில்லை. தன் சொல்லை மீறி முருகனுக்கு பணிவிடை செய்தவர்களை தன் பாணியில் தண்டிக்கிறான். எப்போதும் தைரியத்தின் முகவரியாக இருக்கும் அவருக்கு, கோழையாக வந்து பிறக்கிறான் மகன் வாரா.

தேவாராவின் தொடர் நடவடிக்கைகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த, கடலில் இறங்கவே அவர்கள் பதறுகிறார்கள். ஆனாலும், இந்த தடையை உடைக்க, பைரா முயற்சிகளை எடுக்கிறான். அந்த முயற்சிகள் வெற்றிபெற்றதா? கோழையாக மகன் வளர்ந்ததற்கு காரணம் என்ன? செங்கடல் பகுதி மக்களுக்காக அவன் நடத்திய போராட்டம் என்ன? அவன் மீது ஜான்வி வைத்த காதல் என்னவானது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘தேவாரா’ படத்தின் கதை!

அர்த்தமே மாறிவிட்டது.

தற்போது கமர்ஷியல் படத்தின் அர்த்தமே மாறிவிட்டது. கதையை விட ஹீரோ இமேஜ், கூஸ் பம்ப்ஸ் மொமண்ட்ஸ், ஹீரோயிசம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்து படம் எடுக்கிறார்கள். இது பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கான சூத்திரமாகவே மாறிவிட்டது. அந்த ட்ரெண்டை இந்தப்படத்திலும் கடைபிடித்திருக்கிறார் இயக்குநர் கொரட்டால சிவா

என்.டி.ஆர், படத்தின் கதையை விட தன்னுடைய ஆக்‌ஷன் எபிசோடுகள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க முயன்று இருக்கிறார். 1996 உலகக் கோப்பையின் பின்னணியில் கதையைத் தொடங்குவது சுவாரஸ்யமாக இருந்தது. ரத்னகிரி பகுதிக்கு யதி என்ற கும்பலைக் கைது செய்ய, சிவம் என்ற போலீஸ் அதிகாரி வரும் போது சிங்கப்பா தேவராவின் கதையை விவரிக்கிறார்.

சுறா மீனைக் கொல்லும் அளவுக்கு தைரியசாலி, செங்கடல் பகுதியின் அசைக்க முடியாத மன்னன், ஆக்‌ஷன் அதகளங்கள் என முதல் பாதி முழுக்க ஆக்‌ஷன் குதிரையில் ஏறி ஓடுகிறது. முருகனுக்காக, குழுவாக தேவார மற்றும் பைரா நடத்தும் சாகசங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.

நகைச்சுவை காதல் கதை...

முதல் பாதி சீரியஸாக இருந்ததால், இரண்டாம் பாதியை நகைச்சுவை மற்றும் காதல் கதையோடு நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். ‘தேவாரா’ விற்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையுடன் அமைக்கப்பட்ட வாராவின் பாத்திரப்படைப்பு ரசிக்க வைக்கிறது. நீருக்கடியில் காட்சிகள் இதுவரை தெலுங்கு திரையில் பெரிதாக வரவில்லை. அவையும் நன்றாக இருந்தன

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்...

க்ளைமாக்ஸை ஒரு திருப்பத்துடன் முடித்திருக்கிறார் கொரட்டால சிவா. கடந்த காலத்தில் தெலுங்கில் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டர் படத்தை இது நினைவூட்டுகிறது. அந்தத் திருப்பத்தின் பின்னணியில், உள்ள கதையை இரண்டாம் பாகத்தில் பார்க்க இயக்குநர் லீடு கொடுத்திருக்கிறார்.

வலுவான சமூகக் கருவை எடுத்துக்கொண்டு, அதில் கமர்ஷியலை புகுத்தி படம் எடுப்பது கொரட்டாலா சிவாவின் ஸ்டைல். ஆனால் இந்தப் படத்தில் அந்த மேஜிக் மிஸ்ஸிங். காரணம் கதை மிகவும் சுமார். கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிகிறது. திருப்பங்களும் அவ்வளவு சுவாரசியமானதாக இல்லை. என்டிஆர் மற்றும் ஜான்விகபூரின் காதல் கதை, ஒரே மாதிரியான நாம் பார்த்து பழகிபோன காதல் கதைதான்.

இரு வேடங்களிலும் மாறுபாடுகள்...

‘தேவாரா’ மற்றும் ‘வாரா’ வேடங்களில் என்.டி.ஆர் காட்டியிருந்த வித்தியாசம் நன்றாக இருந்தது. பைராவாக அவரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சைஃப் அலிகான் நடித்துள்ளார். ஜான்விகபூரின் பாத்திரம் பாடல்கள் மற்றும் சில காட்சிகளில் மட்டுமே இருந்தது. பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, முரளி சர்மா ஆகியோரின் நடிப்பு ஓகே ரகம். அனிருத்தின் பிஜிஎம் மற்றும் ‘சுத்தமல்லே’ பாடல் நன்றாக உள்ளது.

என்டிஆர் ரசிகர்களுக்கு மட்டும்...

‘தேவாரா’ என்டிஆர் ரசிகர்களை மகிழ்விக்கும் மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம். கதையில் குறைகள் இருந்தாலும் என்டிஆரின் நடிப்புக்காகவும், ஹீரோயிசத்திற்காகவும் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.