D imman wife Amali: ‘இமான் கோபமே பட மாட்டார்.. இவரு புருஷனா கிடைச்சதுக்கு..’ - நெகிழ்ந்த இமான் 2 வது மனைவி!
இந்தப்படத்தில் இமான் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரின் பிறந்தநாளும் அந்த நிகழ்ச்சியில் விமர்சையாக கொண்டாப்பட்டது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் டி இமான்முதல் மனைவியான மோனிகாவை விவாகரத்து செய்து கொண்ட இவர், அதன் பின்னர் இரண்டாவதாக அமலியை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், அமலிக்கு முதல் கணவருடன் பிறந்த குழந்தையையும் இமான் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொண்டார். இதனிடையே பார்த்திபன் இயக்கி வரும் ‘டீனஸ்’ படம் தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்தப்படத்தில் இமான் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அவரின் பிறந்தநாளும் அந்த நிகழ்ச்சியில் விமர்சையாக கொண்டாப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய டி இமானின் மனைவி, “இவரைப் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம். அவரைப்போல எதிர்தரப்பில் இருப்பவருக்கு, எந்தவித மனஸ்தாபமும் வந்து விடக்கூடாது என்று யோசித்து யோசித்து செயல்கள் செய்யக்கூடிய மனிதரை நான் பார்த்ததே இல்லை.
அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் கோபப்பட்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மிகவும் அமைதியான நபர். அழகான தந்தை. அவர் அன்பை குடும்பத்திற்கு மட்டுமில்ல; எல்லோருக்குமே கொடுக்கிறார். அவரை நான் என்னுடைய கணவராக பெற்றுக் கொண்டதில் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.” என்று பேசினார்.
முன்னதாக இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மலி தன்னுடைய கணவர் இமான் பற்றி பேசியது இங்கே!
அதில் அவர் பேசும் போது, “நான் அவரை வீட்டில் அத்தான் என்று தான் அழைப்பேன். அதற்கு ஒரு கதை ஒன்று இருக்கிறது. அதாவது என்னுடைய அம்மா என்னுடைய அப்பாவை அப்படித்தான் அழைப்பார்கள். அது இவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனால் நானும் அவரை, அவர் ஆசைப்பட்டது போலவே, அப்படியே அழைக்கிறேன். என்னை ஆசையாக அம்மு என்று இமான் அழைப்பார். என்னுடைய பெயரானது அமலி. அதை சுருக்கமாக கொண்டு, அவர் என்னை அழைப்பார். அவர் எனக்கு முதன் முறையாக கொடுத்த பரிசு பைபிள் தான். அதை நாங்கள் சந்தித்த சில காலங்களில், அவர் எனக்கு கொடுத்தார்.
அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. அதனை எப்போதும் நான் கைக்குள் வைத்திருப்பேன். அவர் மிகவும் ரொமான்டிக்கான மனிதர். நிறைய சர்ப்ரைஸ் செய்வார்.
அவர் மிகவும் அமைதியானவர். எப்போதும் சாந்தமாகவே இருப்பார். அதனால் அவர் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலுமே அன்பு என்பது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அவர் இதுவரை கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் தன்னுடைய குரலை கூட இதுவரை உயர்த்தி பேசியது இல்லை. அவர் இசையமைத்ததில் விசுவாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற வானே பாடல் மிகவும் பிடிக்கும். கும்கி படத்தில் உள்ள எல்லா பாடல்களுமே என்னுடைய ஃபேவரைட் தான்.
குறிப்பாக அவர் இசையமைத்த குத்து பாடல்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. அவரது வாழ்க்கையில் அவர் முதலில் மகளுக்கு முதலிடத்தை கொடுப்பார். இரண்டாவதாக இசைக்கு, மூன்றாவது இடத்தை தான் எனக்கு அவர் தருகிறார். நான் அவருக்கு முதன்முறையாக கொடுத்த கிஃப்ட் என்னுடைய மகள் நேத்ராவின் பல்லு தான். நான் சிறுவயதிலிருந்தே நேத்ராவின் பற்களை சேமித்து வருகிறேன். அதில் ஒரு பல்லை இவரிடம் கொடுத்து, இது மிகவும் மதிப்பு வாய்ந்த ஒன்று என்று சொன்னேன் ” என்று பேசினார்.
டாபிக்ஸ்